தி.மு.க., அதிரடி ஆட்டம்: கூட்டணி கட்சிகள் 'ஷாக்'

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (30)
Advertisement
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடத்தி, மொத்த பதவிகளையும் அள்ள, தி.மு.க., அதிரடி திட்டம் வகுத்துள்ளது. ஆளும் கட்சியின் தேர்தல் வியூகம் அறிந்த, கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 100 சதவீதம் வெற்றியை மட்டும் இலக்காக வைக்காமல், கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்த, தி.மு.க.,
DMK, MK Stali, Stalin,திமுக, ஸ்டாலின்

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடத்தி, மொத்த பதவிகளையும் அள்ள, தி.மு.க., அதிரடி திட்டம் வகுத்துள்ளது. ஆளும் கட்சியின் தேர்தல் வியூகம் அறிந்த, கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 100 சதவீதம் வெற்றியை மட்டும் இலக்காக வைக்காமல், கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்த, தி.மு.க., மேலிடம் தனிக்கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பகுதியிலும் உள்ள வாக்காளர்களில், மூன்றில் ஒரு பகுதியினரை, தி.மு.க., உறுப்பினர்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.



வெற்றி வியூகம்


அதற்காகவே, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும் ஒரு தலைமை பொறுப்பாளர்; அவருக்கு கீழ் 10 பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.சமீபத்தில், சென்னை கொளத்துார் தொகுதியில், 'கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும்' என அறிக்கை விடுத்து, புதிய உறுப்பினர் சேர்க்கையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


latest tamil news



கட்சி உள்கட்டமைப்பை பலப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவதன் வாயிலாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், 100 சதவீத வெற்றியை பெற முடியும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கருதுகின்றனர்.

கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமல் வெற்றி பெறும் வியூகத்தை, மாவட்ட செயலர்கள் வகுத்துள்ளனர். அதனால் தான், கூட்டணி கட்சிகளிடம் இடப்பங்கீடு பேச்சு நடத்துவதற்கு முன், மாவட்ட வாரியாக வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் பணிகளை துவக்கி விட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதுடன், ஓட்டுப்பதிவையும் இரு கட்டமாக நடத்த, தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பாக கூறப்படுகிறது. அப்படியொரு முடிவு அறிவிக்கப்பட்டால், மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு, கூட்டணி கட்சியினரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?



அதிர்ச்சி


அவர்களுக்கு பதில் சொந்த கட்சியினருக்கு, உள்ளாட்சி தலைவர்களுக்கான வாய்ப்புகளை தந்து, கட்சியை பலப்படுத்தலாமே என்ற நோக்கில், தி.மு.க., மேலிடம் அதிரடி ஆட்டத்தை துவக்கி உள்ளது.இந்த ஆட்டத்தின் வாயிலாக, தி.மு.க., கொடுக்கிற இடங்களை கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அக்கட்சிகள் கேட்கிற இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால், அவை அதிர்ச்சியில் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
04-ஜன-202219:53:10 IST Report Abuse
Truth Triumph தமிழக வாக்காளர் செய்த சரித்திர தவறுகள் இவர்களை சட்டமன்றத்துக்கு நாடாளும் மன்றத்துக்கு தேர்வு செய்தது ...
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
04-ஜன-202218:10:24 IST Report Abuse
K. V. Ramani Rockfort தி.மு.க.வின் பாரம்பர்யம் இதுதான் என்பதை அதன் வெட்கங்கெட்ட கூட்டணியிலுள்ள அரசியல்வாதிகளுக்கு, பட்டை நாமம் செலுத்தி விட்டனர். இனிமேலாவது மானங்கெட்ட்ட கூட்டணி உணருமா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202217:25:42 IST Report Abuse
J.V. Iyer இந்த ஆறுமாத ஆட்சியை பார்த்தபிறகும் இவர்களுக்கு வோட்டுப்போட்டால் தமிழகம் மீண்டுவர வாய்ப்பு இல்லை அண்ணா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X