டாக்டர் வழங்கிய தொகை; வாங்க மறுத்த தொழிலாளி

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (46)
Advertisement
திருப்பூர் : கலெக்டர் உத்தரவுப்படி, அரசு பெண் டாக்டர் வழங்கிய காசோலையை பெற தொழிலாளி மறுத்து விட்டார்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், காரத்தொழுவைச் சேர்ந்தவர் மருதமுத்து, 33; விவசாய தொழிலாளி. இவரது கர்ப்பிணி மனைவியை, செப்., 23ல், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.அரசு பெண் டாக்டர் ஜோதிமணி, சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார். அதே டாக்டர்,
Doctor, Tirupur, Govt Doctor

திருப்பூர் : கலெக்டர் உத்தரவுப்படி, அரசு பெண் டாக்டர் வழங்கிய காசோலையை பெற தொழிலாளி மறுத்து விட்டார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், காரத்தொழுவைச் சேர்ந்தவர் மருதமுத்து, 33; விவசாய தொழிலாளி. இவரது கர்ப்பிணி மனைவியை, செப்., 23ல், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.அரசு பெண் டாக்டர் ஜோதிமணி, சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார். அதே டாக்டர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில், 37 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற்று, இறந்த நிலையில் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.


latest tamil newsஇதனால், அதிர்ச்சியடைந்த மருதமுத்து கலெக்டரிடம் புகார் அளித்தார். உடுமலை ஆர்.டி.ஓ., கீதா விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து, டாக்டர் ஜோதிமணி, பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 37 ஆயிரம் ரூபாயை திரும்ப வழங்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.

மடத்துக்குளம் தாசில்தார் ஜலஜா கூறுகையில், ''கலெக்டர் உத்தரவுப்படி, டாக்டரிடமிருந்து பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, மருதமுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றோம். ஆனால், அதை வாங்க மறுத்து விட்டனர். கலெக்டர் உத்தரவுப்படி, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
05-ஜன-202218:19:08 IST Report Abuse
THINAKAREN KARAMANI .அரசு பெண் டாக்டர் ஜோதிமணி அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் செய்த செயல் மன்னிக்கத்தக்கது அல்ல. உயிரைக்காக்கும் தெய்வமாக மக்கள் பார்க்கும் ஒரே நபர் டாக்டர் மட்டும்தான். டாக்டரை நம்பித்தானே மக்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அந்தக் குறிப்பிட்ட டாக்டர் அப்போது மருத்துவமனையில் இல்லையென்றால்கூட பரவாயில்லை. டாக்டர் இருந்தும் பிரசவம் பார்க்காமல் அந்தப் பெண்ணைத் திருப்பி அனுப்பும் அளவுக்கு நடந்து கொண்டது மாபெரும் கண்டிக்கத்தக்க செயல். இனியும் இதுபோன்ற செயல் நடைபெறாமல் இருக்க கடும் நடவைக்கை தேவை. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Sakthi - DIST KORBA CG,இந்தியா
05-ஜன-202213:29:45 IST Report Abuse
Sakthi It is very very sad that a professional doctor that too a lady who can understand the pain of a pregnant mother has lost her humanity by taking money from the farmer for doing surgery, which is the responsibility of her, through pvt clinic. However the farmer has shown more generosity for not accepting the money back for the job she has already done. People seeing the doctor community as a god but their behavior is getting gradually changed into a businessman. Hope the entire medical fraternity introspect themselves and implement a model code of conduct to maintain the dignity of the profession.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-ஜன-202207:05:06 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த மருத்துவ பெண்மணியின் மருத்துவ செர்டிபிகேட்டை திரும்ப பெற்று அவரது லைசென்ஸ் பறிக்க படவேண்டும் , வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்க தடை விதிக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X