டாக்டர் வழங்கிய தொகை; வாங்க மறுத்த தொழிலாளி| Dinamalar

டாக்டர் வழங்கிய தொகை; வாங்க மறுத்த தொழிலாளி

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (46) | |
திருப்பூர் : கலெக்டர் உத்தரவுப்படி, அரசு பெண் டாக்டர் வழங்கிய காசோலையை பெற தொழிலாளி மறுத்து விட்டார்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், காரத்தொழுவைச் சேர்ந்தவர் மருதமுத்து, 33; விவசாய தொழிலாளி. இவரது கர்ப்பிணி மனைவியை, செப்., 23ல், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.அரசு பெண் டாக்டர் ஜோதிமணி, சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார். அதே டாக்டர்,
Doctor, Tirupur, Govt Doctor

திருப்பூர் : கலெக்டர் உத்தரவுப்படி, அரசு பெண் டாக்டர் வழங்கிய காசோலையை பெற தொழிலாளி மறுத்து விட்டார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், காரத்தொழுவைச் சேர்ந்தவர் மருதமுத்து, 33; விவசாய தொழிலாளி. இவரது கர்ப்பிணி மனைவியை, செப்., 23ல், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.அரசு பெண் டாக்டர் ஜோதிமணி, சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார். அதே டாக்டர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில், 37 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற்று, இறந்த நிலையில் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.


latest tamil news



இதனால், அதிர்ச்சியடைந்த மருதமுத்து கலெக்டரிடம் புகார் அளித்தார். உடுமலை ஆர்.டி.ஓ., கீதா விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து, டாக்டர் ஜோதிமணி, பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 37 ஆயிரம் ரூபாயை திரும்ப வழங்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.

மடத்துக்குளம் தாசில்தார் ஜலஜா கூறுகையில், ''கலெக்டர் உத்தரவுப்படி, டாக்டரிடமிருந்து பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, மருதமுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றோம். ஆனால், அதை வாங்க மறுத்து விட்டனர். கலெக்டர் உத்தரவுப்படி, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X