பாக்., பிரதமரை விளாசிய முன்னாள் மனைவி ரேஹாம்

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
இஸ்லாமாபாத்: தன் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அவரது முன்னாள் மனைவி ரேஹாம் கடுமையாக சாடி உள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான். இவரது இரண்டாவது மனைவியான ரேஹாம், 2015ல், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இஸ்லாமாபாதில் தன் குடும்பத்துடன் ரேஹாம் வசித்து வருகிறார். பாகிஸ்தானில் இம்ரான் கானின்
Imran Khan, Reham Khan, Pakistan

இஸ்லாமாபாத்: தன் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அவரது முன்னாள் மனைவி ரேஹாம் கடுமையாக சாடி உள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான். இவரது இரண்டாவது மனைவியான ரேஹாம், 2015ல், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இஸ்லாமாபாதில் தன் குடும்பத்துடன் ரேஹாம் வசித்து வருகிறார். பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சி ஆட்சி அமைத்ததில் இருந்து அவரை, ரேஹாம் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ரேஹாம் பயணித்த கார் மீது, சில மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனினும், இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


latest tamil news


இதுகுறித்து ரேஹாம் நேற்று கூறியதாவது: என் உறவினரின் திருமணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, என் கார் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின், நான் பாதுகாப்பாக வேறு வாகனத்தில் ஏறி வீடு திரும்பினேன். இதுதான் இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானா? கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசை உடையவர்களின் இந்த நாட்டிற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை மோசமாக உள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு, இம்ரான் கான் அரசு பொறுப்பேற்க வேண்டும். என் தாய்நாட்டிற்காக துப்பாக்கி குண்டை ஏற்கவும் நான் தயாராக இருக்கிறேன். என் உயிரைப் பற்றி கவலை இல்லை. எனினும், எனக்காக பணியாற்றுவோரின் பாதுகாப்பு முக்கியம். போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜன-202215:59:00 IST Report Abuse
வெகுளி Please don't repeat the same comment
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
04-ஜன-202214:34:24 IST Report Abuse
Fastrack ஜீனத் அமன் சிட்டா வொயிட் இவங்களும் இணைவியா இருந்தாங்க ..சீதா இறந்துவிட்டார் ..அவருக்கு பெண் குழந்தை இம்ரான் மூலம்
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
04-ஜன-202212:35:25 IST Report Abuse
C G MAGESH dhraavida
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X