கருணாநிதி சிலை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா?

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை : திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதற்கு, இன்று பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலுார் மாவட்டம் கைனுார் கிராமத்தில், அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.இவ்வழக்கில், 2021

சென்னை : திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதற்கு, இன்று பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil news
வேலுார் மாவட்டம் கைனுார் கிராமத்தில், அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.இவ்வழக்கில், 2021 அக்டோபரில் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அப்போது, தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்றும்படியும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த திருமுருக தினேஷ், நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், 'திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவது போலாகும்' என்று கூறியுள்ளார்.


latest tamil news
இதையடுத்து, திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகில் சிலை அமைக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதற்கு, மாவட்ட கலெக்டர் மற்றும் உள்துறை செயலரிடம் இருந்து விளக்கம் பெறும்படி, கூடுதல் அரசு பிளீடர் எம்.ராஜேந்திரனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202220:05:32 IST Report Abuse
Kasimani Baskaran சிலை வைத்து மாலை போட்டால் சிலைக்குள் இருக்கும் முகவுக்கு உயிர் வந்து சந்தோசப்படுவார், கல்லரையில் முரசொலி வைத்தால் கல்லரைக்குள் துயில் கொள்ளும் முக படிப்பார் - இதுதான் ஈரோட்டு ஈர வெங்காயம் சொல்லிக்கொடுத்த நவீனமான பகுத்தறிவு.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
04-ஜன-202219:09:40 IST Report Abuse
Samathuvan Please don't repeat the same comment
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
04-ஜன-202218:33:51 IST Report Abuse
DVRR திராவிட பசங்களா சாமிக்கு கல்லில் சிலை உலோகத்தில் சிலை இதனால் கிடப்பது என்ன என்று தினம் தினம் உளறிக்கொட்டிவிட்டு இப்போ எதுக்குடா இந்த கருணாநிதிக்கு சிலை நெடுஞ்செழியனுக்கு சிலை, மாலை, ஆரத்தி, பிரசாதம் எல்லாம். நீ செய்வதை நான் எதிர்ப்பேன் ஆனா நான் அதையே செய்வேன் யாரும் எங்களை குறை சொல்லக்கூடாது என்று உச்ச ஸ்தாயியில் பகருபவர்களே ஏன் என்று உரைக்கவும் இதன் காரணத்தை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X