இந்திய நிகழ்வுகள்
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை: மேலும் ஒருவர் கைது
![]()
|
போதை பொருள் கடத்தல்: மூவர் கைது
பந்தலுார்:கேரள மாநிலம் நிலம்பூருக்கு, போதைப் பொருள் கடத்தி சென்ற, தமிழக இளைஞர்கள், மூவர் கைது செய்யப்பட்டனர்.நேற்று மதியம் பந்தலுார் இருந்து, நாடுகாணி வழியாக கேரளா மலப்புரம் பகுதிக்கு சென்ற, டாக்சி காரை கேரளா போலீசார் நிலம்பூரில் சோதனை செய்தனர். அப்போது காரில், மூன்று- லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 55 கிராம் போதைப் பொருள் கடத்தி செல்வது தெரியவந்தது.கார் மற்றும் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார், பந்தலுாரை சேர்ந்த முர்ஷித் கபீர்,21, கார் டிரைவர் அன்ஷாத்,24, ராஷித்,25, ஆகியோரை கைது செய்தனர். தொடர்பில் உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.
\புத்தாண்டு கொண்டாட்டத்தில் மனைவியை தொலைத்த கணவர்
புதுச்சேரி-புதுச்சேரி கடற்கரையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மனைவி மாயமாகி விட்டதாக, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடு, முதலியார்குப்பம், தில்லை காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அன்பரசன்; மீனவர்.
இவரது மனைவி சந்திரா, 28. ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த 31ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட, கணவன், மனைவி இருவரும் புதுச்சேரி கடற்கரைக்கு வந்தனர் இரவு 7:00 மணியளவில், கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்திரா, மீண்டும் கடற்கரைக்கு வரவில்லை. கடற்கரை மற்றும் முதலியார்குப்பம் உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பெரியக்கடை போலீசில் அன்பரசன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்திராவை தேடி வருகின்றனர்.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; கர்நாடகாவில் பெண் அதிரடி கைது
பெங்களூரு : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, கர்நாடக மாநிலம் உல்லாள் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., இத்தினப்பா பேரனின் மனைவி, தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
![]() Advertisement
|
கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம், உல்லாள் தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., இத்தினப்பா. இவரது மகன் பி.எம்.பாஷாவின் மூத்த மகன் அனாஷ், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.இதனால் பாஷாவின் வீட்டில், ஆகஸ்ட் 4ல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.அப்போது வீட்டிலிருந்த பாஷாவின் இளைய மகன் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார்.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.விசாரணையில் அனாஷின் மனைவி மரியம் எனும் தீப்திக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதன்படி நேற்று பாஷாவின் வீட்டில் இரண்டாம் முறையாக தேசிய புலனாய்வு படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிலிருந்த அனஷின் மனைவி மரியம் கைது செய்யப்பட்டார்.
பஸ்சில் லேப்டாப் திருட்டு
புதுச்சேரி-புதிய பஸ் நிலையத்தில், அரசு பஸ்சில் பொறியாளரின் லேப்டாப்பை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், மஞ்சக்குப்பம் மிஷன் வீதியைச் சேர்ந்தவர் அரிகரசுதன், 30; சென்னை சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். புத்தாண்டு கொண்டாட கடலுார் வந்த அரிகரசுதன், நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டார்.
![]()
|
கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு வந்து, புதிய பஸ் நிலையத்தில் சென்னை செல்லும் தமிழக அரசு பஸ்சில் ஏறி அமர்ந்தார். லேப்டாப் வைத்திருந்த பையை பஸ்சில் வைத்து விட்டு, தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார்.திரும்பி வந்து பார்த்த போது, லேப்டாப் பை திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
எல்.ஐ.சி., முகவர் தீக்குளித்து தற்கொலை
சித்தாமூர்--'குடி'போதையில் எல்.ஐ.சி., முகவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சித்தாமூர் அருகே, பெரிய கயப்பாக்கம் வசித்து வந்தவர் மோகன், 54. இவரது மனைவி கல்பனா, 45. இத்தம்பதிக்கு 9 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் இப்பகுதியில் எல்.ஐ.சி., முகவராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம், இரவு 7.30 மணி அளவில், பெரிய கயப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திலேயே அமர்ந்து, மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார்.பின் பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி.தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்
தமிழக நிகழ்வுகள்
இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை
திருப்போரூர்--கேளம்பாக்கத்தில் பெண் ஒருவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.திருப்போரூர் அடுத்த, கேளம்பாக்கம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஷாயின் ஷா. 26, கணவர் வரதராஜ் இறந்து விட்டார். இரண்டு மகன்கள் உள்ளனர். அவர், அம்மா மும்தாஜ் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மும்தாஜ் பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, ஷாயின் ஷா கட்டிலில் இறந்து கிடந்தார்.கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், ஷாயின் ஷா கற்பழிக்கப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு பாலவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வந்து சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கார்த்திகை தேடி வருகின்றனர். எதற்காக ஷாயின் ஷா கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
'யுடியூபர் துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைப்பு
திருவள்ளூர்-தனியார் தொழிற்சாலையில் பெண்கள் இறந்ததாக, 'யுடியூபில்' வதந்தி பரப்பிய, துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
![]()
|
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள், திருவள்ளூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகில் உள்ள, தனியார் கல்லுாரி விடுதியில் தங்கியுள்ளனர்.இவர்களில் சிலருக்கு, கடந்த மாதம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த, ஒன்பது பேர் இறந்த தாக, வதந்தி பரவியதால், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில், ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதாக, திருவள்ளூர் தாலுகா போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். இதில், யுடியூபில் வதந்திய பரப்பியதாக, திருச்சியைச் சேர்ந்த, சாட்டை துரைமுருகன், 34, கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.இவர் மீது, ஏற்கனவே பல வழக்கு இருந்ததால், அவரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.இதை ஏற்ற கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, துரைமுருகன், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.திருவள்ளூர் கிளைச் சிறையில் இருந்த,துரைமுருகனை, போலீசார் நேற்று காலை, புழல் சிறையில்அடைத்தனர்.
நுாதன மோசடி: மேற்கு வங்க வாலிபர்கள் கைது
சென்னை-கண் மருத்துவமனை நிர்வாகியின் மொபைல் போன் எண்ணை துண்டித்து, அதே எண்ணுக்கு இ- சிம்கார்டு வாங்கி, 24 லட்சம் ரூபாய் சுருட்டிய, மேற்கு வங்க மாநில வாலிபர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவமனை நிர்வாகி ஒருவர், போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார்:எங்கள் மருத்துவமனையின் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண் சேவையை துண்டித்து, மர்ம நபர்கள் அதே எண்ணிற்கு புதிய சிம்கார்டு வாங்கி உள்ளனர்.
![]()
|
அதன் வாயிலாக, எங்கள் வங்கி கணக்கில் இருந்து, 24 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்த நுாதன மோசடி குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். இதில், மர்ம நபர்கள் கண் மருத்துவமனை நிர்வாகியின் போலியான அடையாள அட்டையை சமர்ப்பித்து, இ- சிம்கார்டு வாங்கி உள்ளனர்.அந்த சிம்கார்டு, உ.பி.,யில் 'ஆக்டிவேட்' செய்யப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 16 வங்கிகளுக்கு, 24 லட்சம் ரூபாய் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளதும் தெரிந்தது.
தொடர் விசாரணையில், கோல்கட்டாவைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தலைமையில், இதுபோன்ற மோசடி கும்பல் செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து, மத்திய குற்றப் பிரிவு போலீசார், அந்த கும்பலைச் சேர்ந்த சயந்தன் முகர்ஜி, 25; ராகுல் ராய், 24; ரோகன் அலிசானா, 27; ராகேஷ்குமார் சிங், 33, ஆகியோரை, மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்து, நேற்று சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர்.போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில்,''ஒரு சிம்கார்டு ஆக்டிவாக இருக்கும் போது, அதே எண்ணிற்கு, இ - சிம்கார்டு எப்படி தரப்பட்டது என விசாரிக்கிறோம். ''இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கோல்கட்டா வாலிபர் அடையாளம் தெரிந்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்,'' என்றார்.
பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் மீது வழக்குப்பதிவு
விழுப்புரம்-மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த பரசுரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி, 72; இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்ட 28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் அந்த பெண் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.இது குறித்த புகாரின்பேரில், தமிழ்மணி மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிய சிறுவன் சக்கரத்தில் சிக்கி பலி
பண்ருட்டி-ஓடும் பஸ்சில் இருந்து வேகத்தடையில் இறங்க முயன்ற சிறுவன், பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
![]()
|
கடலுார், கோண்டூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மகன் முகமது அப்பாஸ்,12; பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு கடலுாரில் இருந்து அரசு பஸ்சில் புறப்பட்டார்.பக்கிரிப்பாளையத்தில் பஸ் நிற்காமல் சென்றது. பதட்டமடைந்த சிறுவன், திருவதிகை ரயில்வே கேட் வேகத்தடையில் பஸ் மெதுவாக சென்றபோது முன்பக்க படிக்கட்டில் இறங்க முயன்றார்.
நிலைதடுமாறி கீழே விழந்ததில், அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. அதில், முகமது அப்பாஸ் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.இதனை அறிந்த பக்கிரிப்பாளையம் கிராம மக்கள்,'தங்கள் கிராமத்தில் பஸ் நின்று செல்ல வேண்டும். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பண்ருட்டி-கடலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., சபியுல்லா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று கிராம மக்கள் காலை 10:15 மணிக்கு மறியலை கைவிட்டனர்.பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE