புதுடில்லி: கடந்த டிசம்பர் மாதம் மட்டும் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் ரூ.3,679 கோடி வசூலாகி உள்ளது.
சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும், பாஸ்டேக் வசதி, 2016ம் ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளில், இந்த பாஸ்டேக் முறை, கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலமான சுங்கக் கட்டண வசூல் கடந்த டிசம்பர் மாதத்தில் உச்சம் தொட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் பாஸ்டேக் மூலமாக ரூ.3,679 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சராசரியாக ரூ.119 கோடி வசூலாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் பாஸ்டேக் வசூல் ரூ.502 கோடி அதிகமாகும். அதேபோல், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 2021ம் ஆண்டு டிசம்பரில் ரூ.1,375 கோடி அதிகமாகும். 2020 டிசம்பரில் ரூ.2,304 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE