பிரான்சில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு; 12 பேர் பாதிப்பு| Dinamalar

பிரான்சில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு; 12 பேர் பாதிப்பு

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (11) | |
பாரிஸ்: பிரான்சில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல நாடுகளில் அடுத்த கொரோனா அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று, டெல்டா வைரசை விட அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ்
New Covid Variant, IHU, Discovered, France, More Infectious, Omicron, பிரான்ஸ், புதிய கொரோனா, உருமாறிய கொரோனா, கண்டுபிடிப்பு, ஒமைக்ரான், ஐஎச்யு

பாரிஸ்: பிரான்சில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல நாடுகளில் அடுத்த கொரோனா அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று, டெல்டா வைரசை விட அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான கேமிரோனில் இருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது ஒமைக்ரானை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.


latest tamil news


இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஐஎச்யு பி.1.640.2 என இக்கொரோனாவுக்கு பெயரிட்டுள்ளனர். ஆனால், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இந்த வகை கொரோனா இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X