புதுடில்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ‛தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக்கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்' என அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், டில்லி வடகிழக்கு லோக்சபா தொகுதி .ஜ., எம்பி.,யான மனோஜ் திவாரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.