சேலம்: சபரிமலை பக்தர் களுக்கு சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா டவுன் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், ஜன., 4(இன்று), 11ல், மாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியே மறுநாள் மாலை, 3:15க்கு எர்ணாகுளத்தை அடையும். மறுமார்க்கத்தில் ஜன., 5(நாளை), 12ல், இரவு, 7:00 மணிக்கு கிளம்பி, கோவை, ஈரோடு, சேலம் வழியே மறுநாள் இரவு, 7:30 மணிக்கு, காக்கி நாடாவை அடையும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.