ஐதராபாத்: பிரதமர் மோடி உண்மைகளை ஏற்க தயாராக இல்லை எனவும், புகழ்ச்சியையும் பாராட்டுகளையும் மட்டுமே கேட்க விரும்புவதாக ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஓவைசி விமர்சித்துள்ளார்.
மேகாலயா கவர்னரான சத்யபால் மாலிக், ‛விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள் கடும் விவாதமாகி விட்டது. அவர் மிகவும் ஆக்ரோஷமாக, முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். போராட்டத்தில் 500 பேர் உயிரிழந்ததாக கூறினேன். எனக்காகவா அவர்கள் இறந்தனர் என மோடி குறிப்பிட்டதாக,' கூறினார். இது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், இது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதின் ஓவைசி ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சத்யபால் மாலிக் ஒரு மாநிலத்தின் கவர்னராக இருக்கிறார். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அவர், அரசியலமைப்பு சட்ட பதவியில் இருக்கிறார். பிரதமர் மோடி உண்மையை கேட்க தயாராக இல்லை என கவர்னரே கூறுகிறார். பிரதமர் உண்மையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை; புகழ்ச்சியையும் பாராட்டுகளையும் மட்டுமே கேட்க விரும்புகிறார். நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவது, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற கசப்பான உண்மைகளையாவது மோடி கவனிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE