மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு விரைவில் அறிவிப்பு: அமைச்சர் துரைமுருகன்

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
வேலுார்: மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வேலுாரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்டை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் சரியாக இல்லை, இதற்கான பணத்தை ஒப்பந்தக்காரர்களுக்கு
Minister, DuraiMurugan, Sand, அமைச்சர், துரைமுருகன், மணல் தட்டுப்பாடு

வேலுார்: மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வேலுாரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்டை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் சரியாக இல்லை, இதற்கான பணத்தை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கக் கூடாது என அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதி சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும். அப்போது தான், இந்த திட்டத்தில் முறைகேடுகள் செய்தவர்கள் சிக்குவார்கள்.


latest tamil news


தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும். மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும். கடந்த ஆட்சியில் கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். அரசு அனுமதியில்லாமல் கடந்த ஆட்சியில் நடந்து வந்த கல் குவாரிகளை எல்லாம் தடுத்து நிறுத்தியுள்ளோம். இப்போது அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகள் மட்டும் தான் நடந்து வருகிறது.


latest tamil news


சத்துவாச்சாரி- காங்கேய நல்லுார் பாலம் அறிவிக்கப்பட்டு இரண்டு பட்ஜெட்டுக்கள் முடிந்து மூன்றாவதும் வந்து விட்டது. இத்திட்டம் விரைவில் தொடக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வேலுார் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் சாலைகள் சரி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலுாரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை இனி வாரம் தோறும் ஆய்வு செய்ய உள்ளேன். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அமோகமாக வெற்றி பெறும். வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டு விரிவாக்கத்திற்கு தேவைப்பட்டால் தனியார் நிலத்தையும் கையகப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
05-ஜன-202210:09:58 IST Report Abuse
Barakat Ali நடுவர் மன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி நமக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு (மருத்துவக் கழிவுகளை நமது மாநிலத்தில் வந்து வீசிச்செல்லும் கேரளாவுக்கும் கூடத்தான்) நாம் சுமார் பதினைந்து ஆண்டுகளாக அதே காவிரி மணலை நாம் அனுப்பி வருகிறோம்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-ஜன-202206:02:33 IST Report Abuse
Mani . V அது எப்படி சார், வலிக்காமலேயே அடிக்கிறீங்க? மணல் மாபியாவை வீட்டுக்கு வரவழைத்து மணல் அள்ள அனுமதி (டெண்டர் கோராமல்) கொடுக்கிறீங்க. இங்கிட்டு மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு அறிவிப்பு வெளியிடும் அப்படின்னு அடிச்சு விடுறீங்க. நீங்க எது சொன்னாலும் மக்கள் நம்புவாங்க அப்படிங்கிற நம்பிக்கை. குட்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜன-202219:49:46 IST Report Abuse
வெகுளி தமிழகத்தில் இருந்த மணல் அனைத்தையும் எடுத்து நகை கடன் தள்ளுபடி, நீட் விதிவிலக்கு என்று உதயநிதி கயிறு திரித்ததுதான் தட்டுப்பாட்டுக்கு காரணமா சார்?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X