கோல்கட்டா: முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகியுமான பாபுல் சுப்ரியோ தனக்கு மூன்றாவது முறையாக கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ., அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாபுல் சுப்ரியோ அமைச்சர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் திரிணாமுல் கட்சியில் இணைந்தார். இவருக்கும், இவரது குடும்பத்தாருக்கும் 2020 நவம்பரில் முதல் கோவிட் தொற்று ஏற்பட்டது. அதில் அவரது தாயார் உடல்நலம் பாதித்து உயிரிழந்தார். அவரது தந்தையை போராடி காப்பாற்றினார். பின்னர் டெல்டா வைரசின் ஆதிக்கம் நிறைந்திருந்த ஏப்ரலில் மீண்டும் அவருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தற்போதும் பாபுல் சுப்ரியோ, அவரது மனைவி மற்றும் 84 வயது தந்தைக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நான், என் மனைவி, அப்பா, எனது ஊழியர்கள் அனைவருக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு மூன்றாவது முறையாக தொற்று ஏற்படுகிறது. தீவிர நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு ரூ.61 ஆயிரம் மதிப்பிலான கூட்டு மருந்து வழங்க வேண்டும். இந்த விலை எனக்கு கவலை அளிக்கிறது.
84 வயதான எனது தந்தைக்கு அந்த மருந்து அவசரமாக தேவை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இதனை எப்படி வாங்க முடியும். முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாலும் புதிய தொற்றை தடுக்க முடியவில்லை. கூட்டு மருந்தை அரசு மருத்துவமனைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE