ரொக்க தொகை எங்கே? பெண்கள் கெரோ

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் இல்லாததால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட திமுகவினரை பெண்கள் கெரோ செய்தனர். தமிழகத்தில் வரும் தைப்பொங்கல் தினத்தை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 505 மதிப்பில் பச்சரிசி, வெல்லம், கரும்பு உட்பட 21 பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் மாவட்ட
ரொக்க தொகை எங்கே? பெண்கள் கெரோ

பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் இல்லாததால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட திமுகவினரை பெண்கள் கெரோ செய்தனர்.
தமிழகத்தில் வரும் தைப்பொங்கல் தினத்தை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 505 மதிப்பில் பச்சரிசி, வெல்லம், கரும்பு உட்பட 21 பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தலைமையில் திமுகவினர் பொங்கல் பரிசுகளை வழங்கினார் ஆனால் அதில் ரொக்கப் தொகை எதுவும் வழங்கவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூபாய் ஆயிரம் பரிசு தொகை வழங்கினார். 2021ல் பொங்கல் விழாவின் போது பச்சரிசி வெல்லம் உள்பட பொருள்களுடன் ரூபாய் 2500 ரூபாய் வழங்கினார்.

தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பொங்கல் பரிசுடன் ரொக்கத் தொகை வழங்கப்படாததால் பெண்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ் உள்ளிட்ட திமுகவினரிடம் ரொக்க தொகை எங்கே என கேட்டு கெரோ செய்தனர். அதற்கு திமுகவினர் கடந்த முறை அதிமுகவினர் தேர்தலுக்காக கொடுத்தாக பதிலளித்தனர்: திமுகவினரிடம் ஆக்ரோஷமாக பேசிய ஒரு பெண் கடந்த முறை பொங்கலுக்கு வழங்கப்பட்டதை போல ரொக்க தொகை வழங்க வேண்டும் என கேட்டார் தொடர்ந்து பெண்கள் கூச்சல் போட்டு கெரோ செய்ததால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட திமுகவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
06-ஜன-202204:27:20 IST Report Abuse
meenakshisundaram இதே போல திமுக நிர்வாகிகள் எல்லா ஊர்களிலும் தாலுகா ஆபீஸ் ,பதிவு துறை மின் வாரியம் நீதி மன்றம் ஆகியவற்றின் முன்னே துண்டு போட்டுக்கொண்டு கரை வேட்டியுடன் மக்களுக்கு சேவை(?) செய்யும் நாள் என்று வரும் ?-விடியல் ஆட்சி ?ஸ்டாலின்தான் வாராரு -நல்லாட்சி தரப்போறாரு
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
05-ஜன-202216:36:35 IST Report Abuse
கல்யாணராமன் சு. இவங்க வாங்கறது பிச்சை .............. இதில சட்டம் பேசறாங்க அம்மையாருங்க ............ இந்த அரசு குடுக்கற பொருட்களிலேதான் பொங்கல் வெச்சுக் கொண்டாடணும்னா நிலைமை ரொம்ப கஷ்டம்பா ............ எப்போ நம் மக்கள் மாக்களா இல்லாம, உழைச்சு சம்பாதிக்கணும்னு ஆசைப்படுறாங்களோ, அப்பத்தான் விடிவுகாலம் .......
Rate this:
sankar - Nellai,இந்தியா
07-ஜன-202209:01:07 IST Report Abuse
sankarஇத தேர்தலுக்கு முன்னாடியே சொல்லவேண்டியதுதானே...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-ஜன-202213:44:46 IST Report Abuse
raja ஒட்டு போட்ட மக்களுக்கு...திமுக கவுன்சிலர்/ வார்டு ஓர் ஆயிரம்.. வட்ட செயலாளர் இரண்டாயிரம்.. மாவட்டம் மூவாயிரம்.. இளைஞர் அணி தலைவன் நாலாயிரம்.. தலைவன் ஐயாயிரம்.. மக்களுக்கு கடைசியில் பிம்பிலிகா பிளாப்பி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X