ரொக்க தொகை எங்கே? பெண்கள் கெரோ| Dinamalar

ரொக்க தொகை எங்கே? பெண்கள் கெரோ

Updated : ஜன 04, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (23) | |
பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் இல்லாததால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட திமுகவினரை பெண்கள் கெரோ செய்தனர். தமிழகத்தில் வரும் தைப்பொங்கல் தினத்தை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 505 மதிப்பில் பச்சரிசி, வெல்லம், கரும்பு உட்பட 21 பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் மாவட்ட
ரொக்க தொகை எங்கே? பெண்கள் கெரோ

பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் இல்லாததால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட திமுகவினரை பெண்கள் கெரோ செய்தனர்.
தமிழகத்தில் வரும் தைப்பொங்கல் தினத்தை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 505 மதிப்பில் பச்சரிசி, வெல்லம், கரும்பு உட்பட 21 பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் தலைமையில் திமுகவினர் பொங்கல் பரிசுகளை வழங்கினார் ஆனால் அதில் ரொக்கப் தொகை எதுவும் வழங்கவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூபாய் ஆயிரம் பரிசு தொகை வழங்கினார். 2021ல் பொங்கல் விழாவின் போது பச்சரிசி வெல்லம் உள்பட பொருள்களுடன் ரூபாய் 2500 ரூபாய் வழங்கினார்.

தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பொங்கல் பரிசுடன் ரொக்கத் தொகை வழங்கப்படாததால் பெண்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ் உள்ளிட்ட திமுகவினரிடம் ரொக்க தொகை எங்கே என கேட்டு கெரோ செய்தனர். அதற்கு திமுகவினர் கடந்த முறை அதிமுகவினர் தேர்தலுக்காக கொடுத்தாக பதிலளித்தனர்: திமுகவினரிடம் ஆக்ரோஷமாக பேசிய ஒரு பெண் கடந்த முறை பொங்கலுக்கு வழங்கப்பட்டதை போல ரொக்க தொகை வழங்க வேண்டும் என கேட்டார் தொடர்ந்து பெண்கள் கூச்சல் போட்டு கெரோ செய்ததால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட திமுகவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X