கூடலூர்: கூடலூரில் போதை பொருள் வைத்திருந்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூரிலிருந்து, கேரளா மாநிலம் மலப்புரம் பகுதிக்கு சென்ற காரை, கேரளா போலீசார் நிலம்பூரில் சோதனை செய்து, மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 55 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பந்தலூரை சேர்ந்த முாஷித் கபீர், 21, அன்ஷாத் ,24, ராஷித், 25, ஆகியோரை கைது செய்தனர் செய்தனர். தொடர் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களுடன தொடர்புடையவர்கள், கூடலூர் பகுதியில், போதை பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ( பொ . , ) தலைமையில் எஸ்.ஜ., வெங்கடாசலம், எஸ்.எஸ்.ஜ., ராஜன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . தொடர்ந்து, கூடலூரை சேர்ந்த சரிப் ஷமான், 26, சபின், 22, பீட்டர், 27, பிரேம்ராஜ், 26, ஆகியோரை போலீஸார் இன்று, கைது செய்து, அவர்களிடமிருந்து 5.7 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்தனர். சபின் என்பவர் தனியார் கல்லூரி மாணவர்.போலீஸார் கூறுகையில், 'கூடலூரில், கைது செய்யப்பட்ட , சபின் என்பர்; நிலம்பூரில் கைது செய்த பந்தலூரை முர்ஷத் கபீரிடம் போதை பொருளை பெற்று, விற்பனை செய்ததுள்ளார். இது குறித்து தொடந்து விசாரித்து வருகிறோம்' என, கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE