'பார்' உரிமம் விவகாரம் மந்திரி மீது ராமதாஸ் புகார்

Added : ஜன 04, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை:'டாஸ்மாக் கடைகளின் பார்களை அதிகரிக்கக் கூடாது; அனைத்தையும் மூட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:டாஸ்மாக் கடைகளுக்கு, 'பார்' உரிமம் வழங்குவதில், மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. பெயரளவில் ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டாலும், ஒட்டுமொத்த உரிமங்களையும் ஒரு தரப்புக்கே வழங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான முடிவுகளை,

சென்னை:'டாஸ்மாக் கடைகளின் பார்களை அதிகரிக்கக் கூடாது; அனைத்தையும் மூட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:டாஸ்மாக் கடைகளுக்கு, 'பார்' உரிமம் வழங்குவதில், மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. பெயரளவில் ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டாலும், ஒட்டுமொத்த உரிமங்களையும் ஒரு தரப்புக்கே வழங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான முடிவுகளை, குறிப்பிட்ட சிலர் மட்டுமே தீர்மானிக்கின்றனர் என, ஒப்பந்தப் புள்ளி தாக்கல் செய்துள்ளவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அவர்களில் ஒரு தரப்பினர், அமைச்சரின் வீடு முன் போராட்டமும் நடத்தி உள்ளனர். தற்போது கூடுதலாக 1,551 பார்களுக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருக்கின்றன. இது வணிக நோக்கம் கொண்டது.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதற்கு மாறாக பார்கள் அதிகரிக்கப்படுவது தவறு. அனைத்து மது பார்களையும் மூடி, மதுவிலக்கு நோக்கிய பயணத்தை, அரசு துவக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
06-ஜன-202217:55:35 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan மணல் கொள்ளையில் அடித்தமாதிரி பார் லைசன்ஸிலும் கொள்ளை அடிக்க திமுக திட்டம்.கொள்ளை அடிப்பதை திமுக அமைச்சர்களிடம் கற்கலாம்
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
05-ஜன-202207:47:02 IST Report Abuse
மிளிர்வன் //தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்./// உறுதியாவது..? குருதியாவது..? ஏழை பெண்களின் தாலியறுக்காம உடமாட்டாங்க.. தாலி பெண்ணடிமைத்தன வேலி'ன்னு யாக்யானம் வேற செய்வானுங்க.. நாம் தமிழனுங்க சொல்றாப்புல இதெல்லாம் காலக்கொடுமை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X