புதுச்சேரி, குயவர்பாளையத்தை சேர்ந்த கே.அருண்: 10ம் வகுப்பு முடித்து, மருந்தகத்தில் உதவியாளராக உள்ளேன். சிறு வயது முதலே சிட்டுக்குருவிகளை பார்ப்பதில் ஆர்வம் அதிகம். நாளடைவில் அவற்றை பார்க்க முடியாமல் போனது. சிட்டுக்குருவி இனங்கள் நம்மை சார்ந்து வசிக்க கூடியதாகும். நம் முன்னோர், வீடுகளின் முகப்பில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கான இட வசதிகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.மரங்களின் சந்துகளில், வீடுகளின் வாசல் முகப்பில் உள்ள இடங்களில் அவை வசித்து வந்தன. மாவிலை தோரணங்களோடு, நெல் மணிகள், தானியங்களையும் அவர்கள் தொங்க விட்டு, சிட்டு குருவிகளுக்கான உணவை வழங்கி, பராமரித்து வந்தனர்.காலப்போக்கில், பாரம்பரிய வீட்டு கட்டமைப்புகள் மாற்றம் கண்டு, கான்கிரீட் சுவர்கள், கண்ணாடி திரைகள் என, பறவை இனங்களே வராத வகையில் வீடுகளின் கட்டமைப்புகளை ஏற்படுத்தி விட்டோம்; இதனால், வீடுகளில் வசித்து வந்த சிட்டு குருவிகள் வசிப்பிடமின்றி மறைந்தன.புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள தேநீர் கடை அருகே ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள் அமர்ந்து செல்வதை பார்த்தேன். உடனே, அந்த இடத்தில் அரிசி, தானியங்களை தரையில் இட்ட போது உண்பதற்காக சில வந்தன. ஒரு சில நாட்களிலேயே பல குருவிகள் அங்கே வர துவங்கின
.அவற்றுக்கு உரிய இருப்பிடத்தை ஏற்படுத்த வேண்டும் என உடனடியாக கூண்டுகளுக்கு ஏற்பாடு செய்தேன்; அந்த இடத்தில் நான்கு மரக்கூண்டுகளை கட்டினேன். தினமும் அந்த கூண்டில் கம்பு, தினை, நெல் போன்ற குருவிகள் சாப்பிடும் தானியங் களை வைத்தேன். நான் வரும்போதெல்லாம் அந்த குருவிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வந்து, உணவை அருந்தி விட்டு சென்றன. அது, மன மகிழ்வை தந்தது. தற்போது, 400 குருவிகள் அங்கு உள்ளன. இதையடுத்து, மரங்கள், நண்பர்களின் வீடுகளில் குருவிக்கூடுகளை செய்து வைத்து பராமரித்து வருகிறேன். வீடுகளில் சிட்டுக்குருவிகள் வளர்வதும், அது சத்தம் எழுப்புவதும் தெய்வ வழிபாட்டுக்கு சமம்.சிட்டுக்குருவி இனங்கள் பெருக வேண்டு மெனில், பலரும் அவற்றை பராமரிக்க வேண்டும்.
அதனால், அரசு பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு கூண்டுகளை இலவசமாக வழங்கி வருகிறேன். அவர்களும் ஆசையாய் வாங்கி சென்று, வீடுகளில், மரங்களில் கட்டி வைத்துள்ளனர்.இதுவரை, 5,000 கூண்டுகள் வைத்துள்ளேன். கூண்டுகள், உணவுகளுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இதற்காகவே வழக்கமான வேலைக்கு பின், கூடுதலாக கார் ஓட்டுவது, இதர வேலைகளை செய்து, பணத்தை திரட்ட வேண்டியுள்ளது. என் குடும்பத்தினர் இந்த பணியை பாராட்டுகின்றனர்!

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement