இது உங்கள் இடம்: யாரும் கேட்க மாட்டார்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் புளுகலாமா?

Added : ஜன 05, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வி.பாஸ்கர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டில்சுகாதார பணி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, 'நிடி ஆயோக்' அமைப்பு தரவரிசை பட்டியல் வெளியிடுவது வழக்கம். இதன்படி, 2019 - 20-20ம் ஆண்டிற்கான
Subramanian, Minister, DMK


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


வி.பாஸ்கர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டில்சுகாதார பணி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, 'நிடி ஆயோக்' அமைப்பு தரவரிசை பட்டியல் வெளியிடுவது வழக்கம். இதன்படி, 2019 - 20-20ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த சுகாதார செயல்பாடுகள் அடிப்படையில், கேரளா முதலிடத்தில் உள்ளது; தமிழகம் மற்றும் தெலுங்கானா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஆனால், சுகாதார மேம்பாட்டு நடவடிக்கையில் கேரளா 12ம் இடத்திலும்; தமிழகம், எட்டாம் இடத்திலும் உள்ளன; தெலுங்கானா இதிலும் மூன்றாமிடம் பிடித்துள்ளது. இது, 2019 - 20-20ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல். அப்போது தமிழகத்தில் இருந்தது, அ.தி.மு.க., ஆட்சி. முதல்வராக பழனிசாமியும்; துணை முதல்வராக பன்னீர்செல்வமும் இருந்த காலகட்டம் அது! உண்மையில், நிடி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலுக்காக, பெருமைப்பட வேண்டியோர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தான்.


latest tamil news



மத்திய அரசின் நிதியுதவியில் செய்யப்படும் பல நலத்திட்ட உதவிகளை, ஆட்சியில் இருக்கும் தி.மு.க., அரசு, ஏதோ தங்கள் சொந்த கைக்காசை செலவு செய்து தருவது போல, 'பாவ்லா' காண்பித்து, 'லேபிள்' ஒட்டிக் கொள்ளும்.இவற்றை மறுத்து பேசி, உண்மையான விபரங்களை பொதுமக்களுக்கு எடுத்து சொல்ல, இங்கு அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளுக்கும், 'பவுசு' கிடையாது; தமிழகத்தில் இயங்கும், பா.ஜ.,வுக்கும் நிதர்சனம் தெரியாது. இந்த நிடி ஆயோக் தரவரிசை பட்டியலிலும், தி.மு.க., இப்படித் தான் மூக்கை நுழைத்து பெருமை பீற்றிக் கொண்டிருக்கிறது.

அப்படி பெருமையை பீற்றி இருப்பவர், தி.மு.க.,வின் சாதாரண தொண்டரோ, கழக நிர்வாகிகளுள் ஒருவரோ அல்ல... தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தான் அந்த மஹானுபாவர்! 'நிடி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத் துறைக்கான தரவரிசை பட்டியலில், முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது' என, 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த, 2019 - 20-20ல் ஸ்டாலின், ஒவ்வொரு ஊராக சென்று, 'விடியல்' நிகழ்ச்சி அல்லவா நடத்திக் கொண்டிருந்தார்; அவர் அப்போது முதல்வர் இல்லை. யாரும் கேட்க மாட்டார்கள் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் புளுகலாமா?

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
05-ஜன-202217:19:40 IST Report Abuse
s t rajan சுப்பு உளறுவதில் ராகுல் வின்சியை மிஞ்சிவிட்டார்
Rate this:
Cancel
05-ஜன-202217:02:45 IST Report Abuse
Na Umashankar 0 ...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
05-ஜன-202216:26:58 IST Report Abuse
DVRR சொல்வது யார் அதன் உட்பொருளை அறிவதே சிறந்தது. மாசு சொல்வதால் அது மாசு நிறைந்தது என்று நீங்கள் அறியவேண்டும் இல்லியனேரால் அது உங்கள் தவறு மாசுவின் தவறே அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X