'கடன் பணத்தை கட்டிட்டு சாவுங்க': விவசாயியை திட்டிய பெண் ஊழியர்

Added : ஜன 05, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பெண் ஊழியர் ஒருவர், விவசாயியிடம் கடன் பணத்தைக் கேட்டு மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன், 65; விவசாயி. இந்திய விவசாய முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர். இவர், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள தேசிய வங்கியில் 30 ஆயிரம்
loan, farmer, viral audio

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பெண் ஊழியர் ஒருவர், விவசாயியிடம் கடன் பணத்தைக் கேட்டு மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன், 65; விவசாயி. இந்திய விவசாய முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர். இவர், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள தேசிய வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் விவசாய கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை வசூலிக்க, நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் ரிலையன்ஸ் ஏர்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர், ரகோத்தம்மனுக்கு மொபைல் போனில் பேசியுள்ளார்.


latest tamil news
அவர்களது உரையாடல் வருமாறு:


பெண் ஊழியர்: ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி.,யில் இருந்து பேசுறேன் சார். நீங்க பேங்க்ல லோன் எடுத்து இருக்கீங்களா?

விவசாயி: (பேங்க் பெயரைச் சொல்லி) அதில் லோன் எடுத்து இருக்கேன். உங்களுக்கு என்ன?

ஊழியர்: ஏன் உங்களுக்கு சொல்லலையா, உங்க பேங்க்ல ரிலையன்ஸ்க்கு பார்வர்டு பண்ணிட்டாங்கன்னு.

விவசாயி: அது எப்படி அந்த பேங்க்ல கடன் வாங்குனா ரிலையன்சுக்கு பார்வர்டு பண்ணுவாங்க. யார் கடன் கொடுக்கிறது. யார் கேட்கிறது?

ஊழியர்: நீங்க வருஷக்கணக்கா கட்டாம ஒக்காந்து இருப்பீங்க. நாங்க கேட்க கூடாதா. நீங்க எங்களுக்குத்தான் பதில் சொல்லியாகனும்.

விவசாயி: உன்கிட்ட கடன் வாங்கல. உன்கிட்ட வாங்குனா தான் உனக்கு பதில் சொல்லணும்.
ஊழியர்: நீங்க கிளம்பி வாங்க முதல்ல, இந்த ரூல்ஸ்லாம் பேங்க்ல வந்து பேசுங்க.


விவசாயி: நீ வைமா போனை, நீ ஏன் எனக்கு போன் பண்ற?

ஊழியர்: யோவ் நான்தான்யா கால் பண்ணனும். பேங்க்குக்கு வா. முதல்ல இந்த லா எல்லாம் பேசிட்டு இருக்காத.

விவசாயி: என்னது யோவ் வா...? இரு கலெக்டர்கிட்ட பேசிட்டு வர்றேன்.

ஊழியர்: என்னது கலெக்டர் கிட்ட போறியா. போய் குடு போ. என்னோட பேரு அஸ்வினி தான் போய் சொல்லு போ.

விவசாயி: உங்க கிட்ட கடன் வாங்குனா சாவ சொல்றீங்களா?

ஊழியர்: செத்தாக்கூட கடன கட்டிட்டு செத்து போங்க பரவாயில்லை. கடன கட்டிட்டு சாவுங்க.

விவசாயி: வா வா நீ தான வசூல் பண்ணுவ வா.இந்த உரையாடல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜன-202221:51:07 IST Report Abuse
அப்புசாமி விவசாயி~ செத்தாலும் வாங்குன கடனைக் கட்ட மாட்டேன்.ரிலையன்ஸ்~ மவனே, கடனைக் கட்டாம உன்னை சாக விடமாட்டேன்.சபாஷ், சரியான போட்டி. ஏழைப்பங்காளர் அரசும், கார்ப்பரேட்டும் கை கோர்த்திருப்பதால், விவசாயிக்கு ஆப்பு வைக்கபடும் வாய்ப்பு அதிகம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜன-202220:14:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொதுத்துறை வங்கிகளின் மிகப்பெரிய கடனாளி நிறுவனம் ரிலையன்ஸ் (ஆதாரம் - ரிசர்வ் வங்கி அறிக்கை). அவனிடமே வங்கிகளின் கடனை 50% வரை தள்ளுபடி செய்து விற்று விட்டு அவன் அடாவடி பண்ணி வசூல் செய்கிறான். அந்த நிறுவனத்தின் கடனையே அவர்களே வாங்கி கொண்டுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல் (ஆதாரம் - ரிசர்வ் வங்கி அறிக்கை).. மோடி மஸ்தான் மாயாஜாலம்..
Rate this:
Cancel
ghu -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜன-202216:23:57 IST Report Abuse
ghu kedi men Inga than irukanga, nalla puttu puttu vaikranga.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X