ராமநாதபுரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஆயுத பயிற்சி: வேலூர் இப்ராஹிம்

Added : ஜன 05, 2022 | கருத்துகள் (23)
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத் தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகள் ஆயுதப்பயிற்சி அளிப்பதாகவும், அவர்களால் பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியது: இஸ்லாமியர்களுக்கு உண்மையான பாதுகாப்பு அளிப்பது,
Vellore Ibrahim, BJP, terrorist

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத் தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகள் ஆயுதப்பயிற்சி அளிப்பதாகவும், அவர்களால் பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியது: இஸ்லாமியர்களுக்கு உண்மையான பாதுகாப்பு அளிப்பது, நலத்திட்டங்களை கடந்த அரசுகளை விட இன்றைய மத்திய அரசுதான் அதிகமாக வழங்கி வருகிறது. 60 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவில் பிரதமர் மோடி சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.5123 கோடி ஒதுக்கியுள்ளார்.

அதனால் தான் சிறுபான்மை மக்கள் இன்று கூட்டம் கூட்டமாக பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். பா.ஜ., மீது நம்பிக்கை ஏற்பட்டுஉள்ளது. அனைவருக்குமான வளர்ச்சியை நோக்கி செல்லும் பாரதத்தை பிரதமர் மோடி கட்டமைத்துள்ளதே இதற்கு காரணம்.வழிபாட்டு தலத்திற்கு செல்வதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் எனக்கு கொடுத்துள்ள உரிமையை கூட தி.மு.க., அரசு மறுக்கிறது. சென்றால் தாக்குதல் நடத்துவார்கள் என்கின்றனர்.


latest tamil newsபா.ஜ.,வில் இணைந்ததால் ஒவ்வொரு இடத்திலும் எங்களின் வழிபாட்டு உரிமைக்காக இதுபோல் போராடும் நிலைதான் உள்ளது. இங்குள்ள பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக் கட்சி ரீதியாக எனக்கு பிரசார ஏற்பாடுகள் செய்கிறார். எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதால் என்னை எதுவும் செய்ய முடியாத நிலையில் ஆத்மா கார்த்திக்கை தாக்க திட்டமிட்டுள்ளனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை தெரிந்து கொண்ட பிறகும் போலீசார் அவருக்கு அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பயங்கரவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மக்களை மூளை சலவை செய்கின்றனர். இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கின்றனர், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜன-202215:36:59 IST Report Abuse
Balaji Radhakrishnan மத்திய அரசு உடனே NIA ராமநாதபுரத்திற்க்கு அனுப்ப வேண்டும்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
05-ஜன-202212:37:50 IST Report Abuse
பாமரன் இவர் ஏன் டைரக்டா NIA, IB அல்லது சிபீபீபிக்கு இந்த தகவலை சொல்ல கூடாது?? தெருவுல நின்னுகிட்டு உளறினா அடுத்த ஆட்டுக்குட்டி ஆகிடலாம்னு யாராவது ஐடியா குடுத்திருப்பாங்களோ?
Rate this:
Rio - lasi,ரோமானியா
05-ஜன-202215:10:26 IST Report Abuse
Rioயாரு ராகுல் பப்பு மாதிரியா ??...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
05-ஜன-202216:09:39 IST Report Abuse
Barakat Aliஆட்டுக்குட்டின்னு சொல்லிக்கிட்டே உதறலில் பேண்ட்டை நனைப்பது உ.பீஸ் தான்...
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
05-ஜன-202211:59:29 IST Report Abuse
Rafi Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X