திருப்பூர்: மாநில சுற்றுச்சூழல் கமிட்டியின் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகளில், போலியான அனுமதி சீட்டு வைத்து கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால், பல கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, குன்னத்துார், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், மைவாடி, உடுமலை உள்ளிட்ட பகுதியில், குவாரிகள் உள்ளன. மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையிடம் உரிமம் பெறப்பட்டு, மண், கல் எடுக்கப்பட்டு விற்கப்படுகிறது.
மண் அள்ள 30 முதல், 100 வரை 'டிரிப் ஷீட்' கொண்ட உரிமம் ரசீதை, கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பணம் செலுத்தி வாங்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து, டிப்பர் லாரியில், மண் கொண்டு செல்லும்போது, இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.சட்டவிரோத குவாரிகள்காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை பகுதிகளில், எவ்வித அனுமதியும் பெறாமல், குவாரிகளை, அதிகாரிகளின் 'ஆசியுடன்', மண் அள்ளி கொள்ளை அடித்து வருகின்றனர்.
வேறு இடத்துக்கு வழங்கப்பட்ட 'பர்மிட்'டை காட்டி மண் எடுத்து செல்கின்றனர். வழியில், அதிகாரிகள், போலீசாரிடம் சிக்கினாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுதவிர, போலி ரசீதுகள் தயார் செய்து, மண் திருட்டு ஜோராக நடக்கிறது. இவ்வாறு, 20 முதல், 30 அடி வரையிலும் தோண்டி மண் எடுத்து, தினமும் கடத்தப்படுகிறது.
அரசுக்கு வருவாய் இழப்பு
பொதுமக்கள் கூறியதாவது: மாவட்டத்தில் கிராவல் மண் எடுக்க, கல் குவாரிக்கு அனுமதி பெற, அனைத்து ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பித்தாலும் அனுமதி கொடுக்க இழுத்தடிக்கின்றனர். ஆனால், அரசியல் கட்சியினர், அதிகார வட்டத்தில் உள்ளவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது.
குறைந்த பட்சம், ஒவ்வொருவருக்கும், 10 முதல் அதிகபட்சம், 100 அனுமதி சீட்டு மட்டுமே கனிமவளத்துறையினர் வழங்குகின்றனர். ஆனால், அதிக மண் எடுக்க போலியாக சீட்டு தயாரித்து, அதை காட்டி மண் திருடுகின்றனர்.மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்துக்கு, 9 ஆயிரம் யூனிட் வரை மண் எடுக்கப்படுகிறது. இதனால், அரசுக்கு ஒரு வாரத்துக்கு, 50 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
![]()
|
புதுக்கோட்டை கும்பல் சமீப காலமாக, திருப்பூர் மாவட்டத்தில் கிராவல் மண் யார் எடுப்பதை தீர்மானிக்கும் அதிகார மையமாக புதுக்கோட்டையை சேர்ந்த மண் கும்பல் உள்ளது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு பேரை பொறுப்பாளராக நியமித்துள்ளனர்.
இதுபோக, அதிகளவில் மண் எடுக்கும் இடங்களை கண்காணித்து வசூல் செய்ய, 40க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களின் பிடியில் கிராவல், கல், மண் இருந்து வருவதால், ஒரு லோடு, 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுதொடர்பாக புகார்கள் ஏதாவது கனிமவளத்துறைக்கு சென்றாலும், மண் கும்பலுக்கு அதிகாரிகள் சிலரே தகவல் கொடுத்து விடுவதாக, பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர்.
![]()
|
திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், ஊத்துக்குளி, தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை பகுதியில் மாநில சுற்றுச்சூழல் (ஷியா) கமிட்டியின் முறையான அனுமதியில்லாமல், நிறைய இடங்களில் மண் எடுக்கப்படுகின்றன. இவ்விஷயத்தில், கலெக்டர் தலையீட்டு, மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று எத்தனை இடங்களில் எடுக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
'புகார் எதுவும் வரவில்லை'
திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை துணை இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:நான் மருத்துவ விடுப்பில் உள்ளேன். மாநில சுற்றுச்சூழல் கமிட்டி அனுமதி இல்லாமல், எந்த வித குவாரிகளும் இயங்கவில்லை.
ஒருவேளை, இயங்குவதாக புகார் வந்தால், நாங்களும், தாசில்தாரும் நடவடிக்கை எடுப்போம். ஒன்றிரண்டு புகார் வந்தது, நடவடிக்கை எடுத்தோம். 'ஷியா' அனுமதியில்லாமல், எங்கும், நாங்கள் அனுமதி கொடுப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE