வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அமைச்சர், தி.மு.க.,வினர் வழிபாடு

Added : ஜன 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர் : அமைச்சர் சாமிநாதன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், வாழைத்தோட்டத்து அய்யனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.திருப்பூர் மாவட்டம், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் வளாகத்தில், தல மரக்கன்றுகள் நடும் விழா நேற்று, மங்கல வாத்திய இசையுடன் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், விழுதுகள் அமைப்பினர் சார்பில், கடம்பு, மகிழம், சரக்கொன்றை, ஈட்டி, மந்தாரை, புங்கன், வில்வம் என, 100
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

திருப்பூர் : அமைச்சர் சாமிநாதன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், வாழைத்தோட்டத்து அய்யனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


திருப்பூர் மாவட்டம், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் வளாகத்தில், தல மரக்கன்றுகள் நடும் விழா நேற்று, மங்கல வாத்திய இசையுடன் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், விழுதுகள் அமைப்பினர் சார்பில், கடம்பு, மகிழம், சரக்கொன்றை, ஈட்டி, மந்தாரை, புங்கன், வில்வம் என, 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கடம்பு, மகிழம் மற்றும் செண்பக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் நடராஜன், உதவி கமிஷனர்கள் செல்வராஜ், மேனகா முன்னிலை வகித்தனர். அர்ச்சகர்கள் யோகநாதன், பாரிவள்ளல், ஓதுவா மூர்த்தி பிரகாஷ் ஆகியோர் திருவாசகத்தை பாராயணம் செய்து, மரக்கன்றுகளுக்கு பூஜை செய்தனர். அமைச்சர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், வாழைத்தோட்டத்து அய்யனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜன-202220:14:55 IST Report Abuse
Bhaskaran உள்ளன்போடு இறைவனை வழிபட்டால் நல்லதுதானே .ஆனால் பிழைப்புக்காக வெளியே வறட்டு நாத்திகம் பேச கூடாது. அரகொள்ளையர்கள் தான் ஆபத்தானவர்கள் இவர்கள் தான் ஓசைப்படாமல் கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X