கோவை சர்வதேச விமான நிலையம் 'பிசி': ஒரே நாளில் 25 விமானங்கள் இயக்கம்!

Updated : ஜன 05, 2022 | Added : ஜன 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கோவை: கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு, 25 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின், கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, பெங்களூரு, டில்லி, கோவா உட்பட பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாட்டு போக்குவரத்து

கோவை: கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு, 25 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின், கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, பெங்களூரு, டில்லி, கோவா உட்பட பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் சார்ஜா, சிங்கப்பூருக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதனுடன் மேலும் பல்வேறு நகரங்களுக்கு, கோவையில் இருந்து விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



latest tamil news



இச்சூழலில் தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும், தீவிர பரிசோதனை செய்யப்பட்டு, 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதற்கிடையே, ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடந்த 2ம் தேதி மட்டும், கோவை சர்வதேச விமானநிலையத்திற்கு, 25 விமானங்கள் வந்துள்ளன.
இதில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் இண்டிகோ நிறுவனம் சார்பில், 19 விமானங்களும், ஏர் இந்தியா சார்பில், 2 விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் ஒரு விமானமும், கோ ஏர் நிறுவனம் சார்பில், ஒரு விமானமும் வந்துள்ளது.


latest tamil news



அதேபோன்று, வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா நிறுவன விமானம் மற்றும் சிங்கப்பூரில் இருந்து பிளைஸ்கூட் விமானமும் கோவை வந்துள்ளது.
இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின், கோவை சர்வதேச விமானநிலையத்தில் ஒரே நாளில், 25 விமானங்கள் வரை இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜன-202219:33:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாய் முகூர்த்தம்.. மூடிட்டாங்க லாக் டவுன் போட்டு.. ஹா ஹா ..
Rate this:
Cancel
Nagarajan Thamotharan - Panagudi, Tirunelveli,இந்தியா
05-ஜன-202217:50:34 IST Report Abuse
Nagarajan Thamotharan தென் தமிழக மாவட்ட மக்களின் நலன் கருதி வளைகுடா நாடுகளில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு நேரடி போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். துபாய் , அபுதாபி ,மஸ்கேட் , குவைத் மற்றும் சௌதி அரேபியாவில் தென் தமிழக மக்கள் பெரும் அளவில் வெளிநாடுகளில் வேலை நிமிர்த்தமக வசிக்கிறார்கள். நேரடி விமான போக்குவத்த்து மூலம் மதுரை ,ராமநாதபுரம் , சாத்தூர் , கோவில்பட்டி , தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு பயண நேரம் குறைவதோடு உள்ளூர் சுற்றுலா மற்றும் ஆன்மீகத்தளங்கள் மேம்படும் , பொருளாதாரம் சிறக்கும்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
05-ஜன-202217:20:27 IST Report Abuse
Vijay D Ratnam இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் ஒன்றான கோயம்பத்தூர் விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு நான் ஸ்டாப் விமானம் வாரம் இரண்டு முறை இயக்கவேண்டும். ஐரோப்பா மற்றும் அமேரிக்கா செல்லும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X