தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

Updated : ஜன 05, 2022 | Added : ஜன 05, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இரவு ஊரடங்கு* மாநிலம் முழுவதும் நாளை (ஜன.,6) முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.* இரவுநேர ஊரடங்கு நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள்,
தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இரவு ஊரடங்கு


* மாநிலம் முழுவதும் நாளை (ஜன.,6) முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.* இரவுநேர ஊரடங்கு நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.* மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி.* அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.* பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதி.* உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதி. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.latest tamil newsஞாயிறு முழு ஊரடங்கு


* ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும், அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி.* முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது.* முழு ஊரடங்கில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி.* இரவு ஊரடங்கின் போது மற்றும் முழு ஊரடங்கின்போது விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக செல்லும் மக்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.
நேரடி வகுப்புகளுக்கு தடை


*மழலையர் காப்பகங்கள் தவிர,மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.


*அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.


*பொதுத்தேர்வு செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12 ம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கும்


*அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜன.,20 வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.


*பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை


*பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.50 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி


*பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.


*மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்


*அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.


*அனைத்து பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை


*அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிவழிபாட்டிற்கு தடை


*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை


*சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்


*மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொது மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்


latest tamil news

*தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களில் இருந்து செல்லும் பஸ்களை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வெறு இடங்களில் இருந்து பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


*கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையங்குகள், அனைத்து சேவை துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டுடோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்


*அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் ஜன.,9 க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


*ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேர பணிக்கு செல்லும் போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்க்கான சான்றிதழையும் வைத்து கொள்ள வேண்டும்.100 பேருக்கு அனுமதி


*உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதி


*திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் 100 நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி


*இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதி


*துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்


*கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்


*உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி


*அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்


*திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்


*உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியும் 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.


*அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.


*அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (43)

v j antony - coimbatore,இந்தியா
05-ஜன-202221:48:18 IST Report Abuse
v j antony அனைத்து விஷயங்களிலும் மதங்களை கொண்டுவருவது சிலரின் கீழ்த்தனமான நடவடிக்கையாகி விட்டது உயிர் பலி அதிகரித்து நம் அன்புக்குரியவர்களை இழந்தால் தான் தெரியும் அந்த வேதனை இன்னும் இந்த மதங்களை பிடித்து ஏன் வெறித்தனமாக வாழ்கிறீர்கள் மனிதனுக்காக மதமா மதத்திற்க்காக மனிதனா புரிந்து கொள்ள முடியவில்லை உங்களை
Rate this:
06-ஜன-202205:37:34 IST Report Abuse
ராஜாஅதை நீங்கள் தான் சொல்லவேண்டும் ஆன்டனி. மதத்துக்காக நான் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மற்றிகொண்டால் அது சரியா!? ஆனால் தமிழ்நாட்டில் அது நடந்ததை போன தேர்தலில் பார்த்தோம். முதலமைச்சர் ஒரு மத விழாவில் மட்டும் இந்த ஆட்சி உங்களால் வந்தது, உங்கள் மதம் தான் உலகில் சிறந்தது என்று உரையாற்றுகிறார். அவரை எப்படி அடுத்த மதத்தினர் ஏற்றுக்கொள்வார்கள்? நீங்கள் ஒரு கட்சியின் மீது வைக்கும் அபாண்டதை இங்கு ஒரு கட்சி நிஜமாக செய்வதை வேடிக்கை பார்க்க சொல்கிறீர்களா? இரண்டு வருடங்கள் நாங்கள் எந்த பண்டிகையும் கொண்டாடவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட மதங்களுக்கு மட்டும் பண்டிகை கொண்டாட கடந்த ஏழு மாதங்களாக எந்த தடையும் இல்லை. உறவுகளை இழக்கும் கஷ்டத்தை பேசும் நீங்கள் ஏன் டாஸ்மாக் திறப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை. இங்கே பதியப்பட்டு இருக்கும் உங்கள் கருத்தில் கூட மத நாற்றம் அடிக்கிறது. தயவு செய்து நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஒரு சீசனுக்கு மட்டும் நடுநிலைவாதியக நடிக்காதீர்கள்....
Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
06-ஜன-202208:38:21 IST Report Abuse
Nagarajan Dஅதை ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்... உங்க முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லாமல் ரம்ஜான் மற்றும் ஹிந்து பண்டிகை வாழ்த்து சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்... கிறிஸ்துமஸ் காலத்தில் சர்ச்சுக்கு செல்ல அனுமதியில்லை என சொல்லி இருந்தால் அமைதியாக இருந்திருப்பீர்களா, அந்த அய்யோக்கியன் எஸ்ரா சர்குணம் சொன்னானே ஹிந்துக்களின் வாயில் குத்துங்கள் என்று அன்று நீங்களோ அல்லது அவன் சார்ந்த கட்சி தலைமை அவனை கண்டித்தீர்களா ? ஏன் இந்த பாகுபாடு... வைகுண்ட ஏகாதசி மற்றும் பொங்கல் நேரத்தில் இது தேவை அற்றது......
Rate this:
06-ஜன-202210:32:21 IST Report Abuse
ராஜாஉன்னைப்போல் கோவிலின் பெயரை சொல்லி அதை மூடச்சொல்லும் அளவுக்கு மத வெறியன் அல்ல. சிதம்பரம் கோவிலை மூடினால் உனக்கு என்ன லாபம்? காட்டுமிராண்டி தனத்துக்கும் ஒரு அளவு உண்டு என்பதை புரிந்துகொள்....
Rate this:
06-ஜன-202210:32:26 IST Report Abuse
ராஜாஉன்னைப்போல் கோவிலின் பெயரை சொல்லி அதை மூடச்சொல்லும் அளவுக்கு மத வெறியன் அல்ல. சிதம்பரம் கோவிலை மூடினால் உனக்கு என்ன லாபம்? காட்டுமிராண்டி தனத்துக்கும் ஒரு அளவு உண்டு என்பதை புரிந்துகொள்....
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
05-ஜன-202221:37:18 IST Report Abuse
அறவோன் முதல்வர் அய்யா அவர்களே, நாங்கள் சாத்வீக, நல்ல இந்துக்கள் - இந்துத்வா வாதிகள் அல்ல. உயிருக்கு பயப்படுவோம், எவருடையதும் எடுக்கமாட்டோம். தங்கள் ஆணைக்கு மதிப்பளித்து, நாட்டு நலம், பொது நலம் கருதி வீட்டிலேயே இருப்போம் 🙏🙏🙏
Rate this:
Cancel
valiyavan -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜன-202221:18:46 IST Report Abuse
valiyavan inga lockdown potta vidiyal arasa kura solravanga, yen mattha state lockdown patthi sollala. angalaam Christmas
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X