'உயிருடன் திரும்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி': வேதனையில் பிரதமர்

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 05, 2022 | கருத்துகள் (85)
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமரின் வாகனத்தை மறித்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர், மாநில அதிகாரிகளிடம், 'உயிருடன் திரும்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.' என வேதனையை வெளிப்படுத்திச் சென்றுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்

சண்டிகர்: பஞ்சாபில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமரின் வாகனத்தை மறித்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர், மாநில அதிகாரிகளிடம், 'உயிருடன் திரும்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.' என வேதனையை வெளிப்படுத்திச் சென்றுள்ளார்.




latest tamil news


பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்து தற்போது ரத்து செய்துவிட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பெரோஸ்பூரில் ஒரு பொதுக் கூட்டம் மற்றும் ஹுசைனிவாலாவில் தேசிய போர் நினைவிடத்திற்கு செல்ல இருந்தார். இதற்காக பதிந்தா விமான நிலையத்திற்கு வந்தவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிக்க இருந்தார்.


latest tamil news



மோசமான வானிலை காரணமாக 20 நிமிடங்கள் காத்திருந்தார். வானிலை சீரடையாததால் 100 கிலோ மீட்டரை சாலை மார்கமாக கடப்பது என முடிவு செய்யப்பட்டது. மாநில டி.ஜி.பி.,க்கு தகவல் அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னர் பிரதமரின் கான்வாய் புறப்பட்டது.


latest tamil news



ஹுசைனிவாலாவுக்கு 30 கிலோ மீட்டர் முன்பாக மேம்பாலத்தில் வந்துக்கொண்டிருந்த பிரதமரின் கான்வாயை போராட்டக்காரர்கள் மறித்தனர்.


latest tamil news


பிரதமரின் பாதுகாப்பில் மிகப்பெரிய குளறுபடியை ஏற்படுத்தியது. சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்திலேயே காத்திருந்த பிரதமர், நிலைமை சீரடையாததால் மீண்டும் விமான நிலையம் திரும்பினார். பெரோஸ்பூர் பொதுக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.


latest tamil news



விமான நிலையத்தில் இருந்த மாநில அரசு அதிகாரிகளிடம் பிரதமர், “இங்கு வரைக்குமாவது உயிருடன் திரும்பினேனே. அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என கோபமாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

'காங்கிரஸ் அரசு கையாண்ட உத்திகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரையும் வேதனைப்படுத்தும்' என பா.ஜ.க., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
06-ஜன-202222:21:04 IST Report Abuse
Sai எமெர்ஜென்சியை பற்றி ஏகடியம் பேசறோம் மூன்று காந்திகளின் முடிவைப் பற்றி மறந்து விடுகிறோம் செங்கோட்டை கொத்தளத்தில் குண்டு துளைக்காத கண்ணாடியை அகற்றி முழங்கியவர்தான் கண்டைனர் அரண் அமைத்தார் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்தா சுலபமா ஜெயிச்சிடலாம்னு இந்த நாடகம் அரங்கேறுது ஜனவரி இருபத்தாருக்கு பிறகு எதிர்பார்க்கலாம்
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
06-ஜன-202207:45:35 IST Report Abuse
Dhandapani சாதாரண மனிதனை நேசியுங்கள் மோடிஜி, நீங்கள் தனியாக காரை ஒட்டிக்கொண்டு எங்குவேண்டுமானாலும் தைரியமாக செல்லலாம் அப்துல் கலாமை போல, பணக்காரர்களை மட்டும் நேசித்தல் பாதுகாப்பு தான் தேவை, நீங்கள் சாதாரண மனிதராய் இருந்து வந்தவர்தான் என்பதை மறவாதீர் மோடிஜி
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
06-ஜன-202202:00:51 IST Report Abuse
J. G. Muthuraj நாட்டின் பிரதமர் அவர்கள் அவருக்கு நேர்ந்த அனுபத்தை மிகைப்படுத்தி பேசியதாக தெரிகிறது....அவர் உயிருக்கு ஆபத்தான நிலை என்று அப்படி ஒன்றும் நிகழவில்லையே...அவரது வாகனத்தை சுற்றி பாதுகாப்பாளர்கள் இருந்தார்களே....இந்த ஆட்சி காலத்தில் பலர் இன்னும் ஆதரவின்றி உயிருடன் இருக்கிறார்கள் என்று வேதனை பட்டுக்கொள்வோம்....
Rate this:
பேசும் தமிழன்எந்த பதவியிலும் இல்லாத... சும்மா சுற்றி கொண்டு திரியும் பப்பு க்கு இத்தனை பாதுகாப்பு.... நாட்டின் பிரதமாராக இருப்பவர் உயிர் உங்களுக்கு அவ்வளவு இலேசாக தெரிகிறது??! இத்தனைக்கும் பப்பு பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் ஆள்... அப்படி இருந்தும் அவர் மற்றும் அவரது குடும்பத்துக்கு இதனை பாதுகாப்பு எதற்கு???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X