உத்தம்சந்த் வீட்டில் ஆறு வார காலம் தங்கி இருந்தார்கள். தினமும் நேதாஜியையும் அவரது நண்பரையும் ஓர் அறையில் வைத்து பூட்டி விட்டு கடைக்கு சென்று விடுவார் உத்தம்சந்த்.
அந்த நேரத்தில் அந்த அறையின் சாவி உத்தம்சந்த் மனைவியிடம் இருக்கும். ஒருநாள் காலை நேரத்தில் உத்தம் சந்த் உடன் அமர்ந்து நேதாஜி டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த உத்தம்சந்த் நண்பர் திடீரென உள்ளே வந்துவிட்டார். அவர் நேதாஜியை அடையாளம் தெரிந்து கொண்டார். அவர் விஷயத்தை வெளியில் சொல்லி விடுவாரோ என்று உத்தம்சந்த் நினைத்தார். நேதாஜிக்கும் அப்படி ஒரு நினைப்பு வந்தது.
வெளியில் சென்ற அந்த நண்பர் யாரிடமாவது விஷயத்தை சொல்லி ஏதேனும் குளறுபடி செய்து விடுவாரோ என்ற எண்ணத்தில் மீண்டும் லாட்ஜ்க்கு திரும்பினார் நேதாஜி.
ஆனால் அங்கு கொடுக்கப்பட்ட உணவு நேதாஜிக்கு மறுபடியும் ஒத்துக்கொள்ளவில்லை. அவருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தியது. மீண்டும் உத்தம்சந்த் வீட்டிற்கே திரும்பினார்.
எழுத்துருவாக்கம்:
ஆதலையூர் சூரியகுமார்,
மாநில செயலாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்,
கும்பகோணம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE