சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 05, 2022
Advertisement
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில், காவிரி பாசன பகுதியில், விழுப்புரம் - கடலுார் மாவட்டத்தை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில், எட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஏலப்புள்ளிகளை கோரியுள்ளது. அவற்றை செயல்படுத்த மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, ஏல பட்டியலில் இருந்து அந்த நிறுவனங்களை நீக்க வேண்டும்.ஏலப்புள்ளிகளை தடுத்து நிறுத்தி விடலாம். அந்தப் பகுதியின்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில், காவிரி பாசன பகுதியில், விழுப்புரம் - கடலுார் மாவட்டத்தை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில், எட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஏலப்புள்ளிகளை கோரியுள்ளது. அவற்றை செயல்படுத்த மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, ஏல பட்டியலில் இருந்து அந்த நிறுவனங்களை நீக்க வேண்டும்.ஏலப்புள்ளிகளை தடுத்து நிறுத்தி விடலாம். அந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்பதையும் சொன்னால் நலம்!


தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு:
வறுமையால் பள்ளிக்கு செல்ல முடியாதவர்களுக்காக, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் துவக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். கருணாநிதி முதல்வராக இருந்த போது, அதில் கூடுதலாக முட்டையை கொடுத்தார். யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு நன்மை செய்கின்றனர்; அதை, மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மக்கள் தலையில் மிளகாய் அரைக்காமல், ஆட்சியாளர்கள் நல்லது செய்தால் சரி தான்!


யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் யாதவ் அறிக்கை:
அனைத்து தரப்பு மக்களும் எளிதில் சிகிச்சை பெறுவதற்கு பேருதவியாக இருந்த, 'அம்மா' மினி கிளினிக்குகளை மூட, தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் காரணங்களுக்காக மக்கள் நலத்திட்டத்தை நிறுத்தக் கூடாது.எண்ணிக் கொள்ளுங்கள்... இன்னும் சில மாதங்களில், 'அம்மா' உணவகங்களும் மூடப்படும்; தளபதி உணவகம் அல்லது தலைவர் உணவகம் என்ற பெயரில் வரும் பாருங்கள்!



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை:
கடலுார் மாவட்டம், பாலுார் கிராம கடை வீதியில், எங்கள் கட்சிக் கொடி பறக்கக் கூடாதாம். தங்கள் எதிரிகள் யார் என்பதை கூட அறிய இயலாத ஜாதி பித்தர்களின் அநாகரிகத்தை என்னவென்று சொல்லுவது?உங்கள் கட்சி இளைஞர்களுக்கு, 'அடங்க மறு; அத்துமீறு' என சொல்லிக் கொடுத்துள்ளீர்கள். அதனால் ஏற்படும் குழப்பங்களால், அப்பாவி இளைஞர்களை வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பேட்டி: தி.மு.க.,வின் நிலைப்பாடு முரணாக உள்ளது. ஆட்சிக்கு வரும் போது ஒன்று சொல்கின்றனர்; வந்த பின் வேறு செய்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, முன் இருந்த நல்ல திட்டங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டுமே தவிர, அவற்றை மூடி விடக்கூடாது.நல்லா புரியும்படி, தமிழக அரசுக்கு சொல்லுங்கள். தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாது என தொடர்ந்து ஏமாற்றக் கூடாது என்றும் சொல்லி வையுங்கள்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X