எந்த அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்படமாட்டார்கள்: பஞ்சாப் முதல்வர் திட்டவட்டம்

Updated : ஜன 05, 2022 | Added : ஜன 05, 2022 | கருத்துகள் (35)
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் பிரதமர் சென்ற பாதையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தாமல் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட மாநில அரசு காரணமானதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இவ்விஷயத்தில் எந்த அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படமாட்டார்கள் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறினார்.பஞ்சாபில் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களால் பிரதமரின் வாகனம்
எந்த அதிகாரியும், சஸ்பெண்ட்,செய்யப்பட,மாட்டார்கள்,பஞ்சாப் முதல்வர்,திட்டவட்டம்

சண்டிகர்: பஞ்சாபில் பிரதமர் சென்ற பாதையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தாமல் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட மாநில அரசு காரணமானதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இவ்விஷயத்தில் எந்த அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படமாட்டார்கள் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறினார்.

பஞ்சாபில் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களால் பிரதமரின் வாகனம் நிறுத்தப்பட்டு, அவர் 20 நிமிடங்கள் சாலையிலேயே காத்திருந்து டில்லி திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மாநில காங்கிரஸ் அரசின் தவறு என பா.ஜ.க., தேசிய தலைவர் நட்டா குற்றம்சாட்டியுள்ளார். இந்த விஷயத்தை தீர்ப்பதற்காக முதல்வர் சரண்ஜித் சிங்கை தொடர்புகொண்ட போது நிலைமையை மோசமாக்கும் வகையில் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாக கூறினார்.


latest tamil newsஇது குறித்து முதல்வர் சரண்ஜித் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னுடைய செயலருக்கு கோவிட் தொற்று உறுதியானதால் அவருடன் தொடர்பிலிருந்த என்னால் பிரதமரை அழைக்க செல்ல முடியவில்லை. பிரதமரின் பயண வழி திடீரென மாற்றப்பட்டது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பெரோஸ்பூர் மாவட்டத்தில் திடீரென சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். அவர்களை அப்புறப்படுத்த 20 நிமிடங்கள் ஆகும்.

வேறு வழி குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு கூறினோம். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். எந்த பாதுகாப்பு குளறுபடியும் நடக்கவில்லை. அப்படி ஏதேனும் நடந்திருந்தால் விசாரணை நடத்துவோம். பிரதமருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எந்த அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்படமாட்டார்கள். அவர் திரும்பிச் செல்ல நேர்ந்ததற்காக வருந்துகிறேன், என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஜன-202207:20:37 IST Report Abuse
Bhaskaran மாதாஜியின் ஆணைப்படி
Rate this:
Cancel
Rajeswaran - chennai,இந்தியா
08-ஜன-202210:33:18 IST Report Abuse
Rajeswaran தமிழ் நாட்டில் முதலில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் , அடுத்து மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வந்த உடன் பெரும் வன்முறை , தற்போது பஞ்சாபில் பிரதமர் தடுத்து வைப்பு மத்திய அரசு தனது அதிகாரத்தை சரியாகதைரியமாக வெளிப்படுத்த தயங்குவதன் வெளிப்பாடு இது மத்திய அரசு சாட்டையயை சுழற்ற மறுப்பதன் விளைவு இது இனியாவது மத்திய அரசு விழித்துக்கொள்ளுமா
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-ஜன-202205:09:06 IST Report Abuse
NicoleThomson தவறான ஆட்சிமுறைகளை கையாளுகிறார் இவரை கண்டிக்க துப்பில்லை சூனியாவுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X