புதுடில்லி-முதுநிலை மருத்துவப் படிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, 'ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கிடைக்காமல் அவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது' என, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
![]()
|
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் உச்ச வரம்பு நிர்ணயம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை நடத்தக்கோரி, மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, 8 லட்சம் ரூபாய் உச்ச வரம்பை தொடர பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்வந்தது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு, 2019ல் இருந்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வருவாய் உச்ச வரம்பு தொடர்பாக தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
![]()
|
மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களுக்கு கவுன்சிலிங்கை தொடர நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
அதற்கு பாதிப்பு ஏற்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.இவ்வாறு அவர் வாதிட்டார்.வழக்கின் விசாரணை இன்றும் தொடருகிறது. விசாரணையின் முடிவில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement