மணிமுக்தா அணை ஷெட்டரில் பழுது; அதிகளவில் வெளியேறும் தண்ணீர்

Added : ஜன 06, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பழைய ஷெட்டரில் ஏற்பட்ட பழுதினால் தண்ணீர் வெளியேறி வருகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயர 736.96 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் தண்ணீர் மணி மற்றும் முக்தா நதிகள் வழியாக அணைக்கு வருகிறது.மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர் வரத்தாக

கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பழைய ஷெட்டரில் ஏற்பட்ட பழுதினால் தண்ணீர் வெளியேறி வருகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயர 736.96 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் தண்ணீர் மணி மற்றும் முக்தா நதிகள் வழியாக அணைக்கு வருகிறது.

மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர் வரத்தாக உள்ளது. அணையில் 3 பழைய ஷெட்டர்களும், 4 புதிய ஷெட்டர்களும் உள்ளன. இந்த அணையில் இருந்து பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் திறப்பதன் மூலம் 17 கிராமங்களைச் சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் பயனடைகின்றன.சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழையினால், மணிமுக்தா அணை முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி புதிய ஷெட்டர் வழியாக ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி பாசனத்திற்காக வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து, அவ்வப்போது பெய்து வரும் மழையால் அணையில் நீர்மட்டம் சீராக பராமரிக்கப்பட்டது.நேற்று முன்தினம் நிலவரப்படி அணையில் 35 அடி உயரத்திற்கு 660.26 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 1வது பழைய ஷெட்டரின் ஓரப்பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் வெளியேறி வருகிறது.இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழுதாகிய ஷெட்டர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X