பைக் மீது லாரி மோதி விபத்து மனைவி பலி; கணவர் காயம்| Dinamalar

பைக் மீது லாரி மோதி விபத்து மனைவி பலி; கணவர் காயம்

Added : ஜன 06, 2022 | |
விழுப்புரம் : பைக் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி இறந்தார். கணவர் படுகாயமடைந்தார்.விழுப்புரம் அடுத்த பை.சேத்துாரைச் சேர்ந்தவர் சன்னியாசி, 60; இவர், தனது மனைவி ஜெயம்மாள், 58; என்பவருடன், பைக்கில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்றார்.விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.இதில், நிலைத்தடுமாறி கீழே

விழுப்புரம் : பைக் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி இறந்தார். கணவர் படுகாயமடைந்தார்.விழுப்புரம் அடுத்த பை.சேத்துாரைச் சேர்ந்தவர் சன்னியாசி, 60; இவர், தனது மனைவி ஜெயம்மாள், 58; என்பவருடன், பைக்கில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்றார்.விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த ஜெயம்மாளின் கால்களின் மீது லாரி ஏறியது. இதில், படுகாயமடைந்த ஜெயம்மாள் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். மேலும், காயமடைந்த சன்னியாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.புகாரின்பேரில், லாரி டிரைவர் கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியராஜ், 38; என்பவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X