பிரிவை தாங்காத மயில்: நெகிழ்ச்சியில் மக்கள்

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (4)
Advertisement
குச்சேரா-ராஜஸ்தானில் உயிரிழந்த மயிலை எடுத்துச் சென்ற வனத் துறை ஊழியர்களை, அதன் ஜோடி மயில் பின்தொடர்ந்து சென்றது, மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நாகவுர் மாவட்டத்தின் குச்சேரா என்ற பகுதியில், கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சுற்றித் திரிந்து வந்தன. இதில் ஒரு மயில்,

குச்சேரா-ராஜஸ்தானில் உயிரிழந்த மயிலை எடுத்துச் சென்ற வனத் துறை ஊழியர்களை, அதன் ஜோடி மயில் பின்தொடர்ந்து சென்றது, மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.latest tamil news
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நாகவுர் மாவட்டத்தின் குச்சேரா என்ற பகுதியில், கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சுற்றித் திரிந்து வந்தன. இதில் ஒரு மயில், சமீபத்தில் உயிரிழந்தது.

இதையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்த வனத் துறை ஊழியர்கள், தகனம் செய்வதற்காக உயிரிழந்த மயிலை, ஒரு துணியில் வைத்து கையில் துாக்கிச் சென்றனர். அப்போது, அதனுடன் இருந்து வந்த மற்றொரு மயிலும், அவர்களை பின்தொடர்ந்து நடந்து சென்றது. தன் ஜோடியை பிரிந்து செல்ல மனமில்லாமல், மயில் பின்தொடர்ந்து சென்ற காட்சி, காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.


latest tamil newsஇந்த காட்சிகள் அடங்கிய 'வீடியோ' சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 19 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை, பல லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். மேலும், அதை பலரும் பகிர்ந்து, தங்கள் கருத்துகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.மனிதர்களை காட்டிலும் விலங்குகளும், பறவைகளும் ஒன்றுக்கொன்று அதிக அன்பும் பாசமும் காட்டும் என்றும், அந்த மயிலின் வலியை தங்களால் உணர முடிகிறது என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
06-ஜன-202213:41:57 IST Report Abuse
NARAYANAN.V இராஜஸ்தான் மாநில வனத்துறையினர் அந்த இறந்துபோன மயிலின் உடலை அப்புறப்படுத்த அந்த மாநில முதல்வர் அசோக் கெஹலோட்டிடம் உத்தரவு பெற்றுக்கொண்டுதான் காரியத்தைச் செய்தனரா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-ஜன-202208:44:06 IST Report Abuse
duruvasar நெகிழ்வான செய்திதான். இருப்பினும் அஷோக் கெலாட் ராஜஸ்தானில் ஆட்சி செய்கிறார் என ஏன் போட்டிருக்கிறீர்கள் ? அமெரிக்காவில் தன் எஜமானனுக்கு விபத்து ஏற்பட்ட இடத்திற்க்கு அவரது நாய் போலீஸை கூட்டி சென்றதாக ஒரு செய்தியையும் வெளியிட்டு இருக்கிறீர்கள், அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பையன் என்ற உண்மையை ஏன் மறைத்து நாயைப் பற்றிய செய்திமட்டும் போடப்பட்டிருக்கிறது.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
06-ஜன-202205:24:00 IST Report Abuse
chennai sivakumar மனிதனை பணம் என்ற ஆட்கொல்லி பிரித்து வைத்து விடுகிறதே. அப்போ எங்கே பாசம், நேசம் எல்லாம்?? Only money which measures your status, affection,love, friship which the animals don't have
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X