குச்சேரா-ராஜஸ்தானில் உயிரிழந்த மயிலை எடுத்துச் சென்ற வனத் துறை ஊழியர்களை, அதன் ஜோடி மயில் பின்தொடர்ந்து சென்றது, மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
![]()
|
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நாகவுர் மாவட்டத்தின் குச்சேரா என்ற பகுதியில், கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு மயில்கள் ஒன்றாக சுற்றித் திரிந்து வந்தன. இதில் ஒரு மயில், சமீபத்தில் உயிரிழந்தது.
இதையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்த வனத் துறை ஊழியர்கள், தகனம் செய்வதற்காக உயிரிழந்த மயிலை, ஒரு துணியில் வைத்து கையில் துாக்கிச் சென்றனர். அப்போது, அதனுடன் இருந்து வந்த மற்றொரு மயிலும், அவர்களை பின்தொடர்ந்து நடந்து சென்றது. தன் ஜோடியை பிரிந்து செல்ல மனமில்லாமல், மயில் பின்தொடர்ந்து சென்ற காட்சி, காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
![]()
|
இந்த காட்சிகள் அடங்கிய 'வீடியோ' சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 19 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை, பல லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். மேலும், அதை பலரும் பகிர்ந்து, தங்கள் கருத்துகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.மனிதர்களை காட்டிலும் விலங்குகளும், பறவைகளும் ஒன்றுக்கொன்று அதிக அன்பும் பாசமும் காட்டும் என்றும், அந்த மயிலின் வலியை தங்களால் உணர முடிகிறது என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement