இந்தியாவில் முதல் ஒமைக்ரான் இறப்பு பதிவு: தடுப்பூசி போட்டும் மரணம்!

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
ஜெய்பூர்: ஒமைக்ரான் தொற்று உறுதிச்செய்யப்பட்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த முதியவர் கடந்த டிச., 31 அன்று இறந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அவர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதில் ஒமைக்ரான் வகை தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மட்டும் 2 ஆயிரத்தை

ஜெய்பூர்: ஒமைக்ரான் தொற்று உறுதிச்செய்யப்பட்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த முதியவர் கடந்த டிச., 31 அன்று இறந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அவர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.latest tamil newsதினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதில் ஒமைக்ரான் வகை தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மட்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில் சுமார் 900 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகம் பதிவாகி வருகிறது.


latest tamil newsஇந்நிலையில் ராஜஸ்தானில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட இணைநோய் உள்ள முதியவருக்கு டிச., 15 அன்று கோவிட் தொற்று ஏற்பட்டது. டிச., 25 அன்று அது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு என மரபணு ஆய்வு மூலம் தெரியவந்தது. 6 நாட்கள் கழித்து டிச., 31 அன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் இது ஒமைக்ரான் தொடர்புடைய முதல் மரணமாகும். அவர் ஏற்கனவே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர். இதனை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
06-ஜன-202217:45:34 IST Report Abuse
Samathuvan தடுப்பு ஊசி வந்தப்ப அமெரிக்கன் சொன்னான் என்னுடையது 95% ஆற்றல் வாய்ந்ததுன்னு சொன்னான், ரசியக்காரன் 90% இன்னு சொன்னான், நம்மளும் நம்ம பங்குக்கு என்னோடது 85% சொன்னோம். ஆனால் எல்லோரும் காழ்புணற்சில சொன்னோம் சைனாவோடது 70% தான் அதை போட்டவங்க மாத்திரம் பூஸ்டர் போடணும்னு சொன்னான். இப்ப என்ன ஆச்சு எல்லோருடையதும் ஒன்னும் இல்லன்னு நிரூபணம் ஆகிவிட்டது. இது என்னோவோ உலக அரசியல் நாடகம் போலத்தான் உள்ளது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஜன-202216:59:36 IST Report Abuse
J.V. Iyer என்ன வயது என்று போடவில்லை. அறுவது வயதிற்கு மேல் மற்ற உடல் பிரச்சினைகள் இருந்தால் எதுவும் காப்பாற்றாது. இது இயற்கை மரணம்.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
06-ஜன-202215:03:23 IST Report Abuse
M.COM.N.K.K. மாஸ்க் அணிவது என்பது நமது கடமையாகும் எங்களைமட்டும் காவல்துறை பிடித்து அபராதம் போடுகிறது நடந்து போகிறவர்களுக்கு அபகாரம் இல்லையா என்று கேட்பது தவறான ஓன்று. நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் அதைவிடுத்து அடுத்தவர்களை பற்றி குறைசொல்லி நாம் பேசுவது முற்றிலும் தவறான செய்கையாகும்.நடந்து போகிறவர்களுக்காக நாம் உயிர் வாழவில்லை.நமக்காக நாம் வாழ்கிறோம் இதை நாம் முதலில் நாம் புரிந்துகொண்டால் போதும்.நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.காவல்துறை அபராதம் போட்டுவிடும் என்பதற்காக நாம் மாஸ்க் போடுகிறோமா இதை நாம் முதலில் புரிந்துகொண்டால் போதும் எல்லாம் நன்றாகவே நடக்கும் நடந்துபோகிறவர்களையும் புத்திமதிசொல்லி அவர்களையும் கண்டித்துதான் அனுப்புகிறது நமது காவல்துறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X