சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

படப்பெட்டியுடன் பறக்கும் குட்டி பலூன்

Added : ஜன 06, 2022
Advertisement
தரைக் காட்சிகளை வானிலிருந்து துல்லியமாக எடுக்க செயற்கைக் கோள்களால் மட்டும் தான் முடியுமா? ஒரு விமானத்திலிருந்து படமெடுக்கலாம். நவீன ட்ரோன்களைப் பயன்படுத்தலாம். ஆனால், இவை எல்லாவற்றையும்விட மிகக் குறைவான செலவில் எடுக்க குட்டி பலுான்கள் உதவும். அதைத்தான் அமெரிக்காவின் கொலராடோவிலுள்ள 'அர்பன் ஸ்கை' செய்கிறது.ஹீலியம் வாயு நிறைந்த 8 அடி உயர பலுானில், பலவகை நவீன

தரைக் காட்சிகளை வானிலிருந்து துல்லியமாக எடுக்க செயற்கைக் கோள்களால் மட்டும் தான் முடியுமா? ஒரு விமானத்திலிருந்து படமெடுக்கலாம். நவீன ட்ரோன்களைப் பயன்படுத்தலாம். ஆனால், இவை எல்லாவற்றையும்விட மிகக் குறைவான செலவில் எடுக்க குட்டி பலுான்கள் உதவும். அதைத்தான் அமெரிக்காவின் கொலராடோவிலுள்ள 'அர்பன் ஸ்கை' செய்கிறது.

ஹீலியம் வாயு நிறைந்த 8 அடி உயர பலுானில், பலவகை நவீன கேமராக்கள், ஹீலியம் வாயுவைக் கட்டுப்படுத்தும் கருவிகளை வைத்து மேலே பறக்கவிடுகின்றனர். தரையிலிருந்து 18 கி.மீ., உயரம் வரை பறக்கும் இந்த பலுான், கேமராக்களை சுழற்றி ஒரு மணி நேரத்தில் 1,000 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளவற்றை படம்பிடிக்கிறது.

காட்டுத் தீ கண்காணிப்பு, வனக் கொள்ளை தடுப்பு, மலைகளில் நிலச் சரிவு மற்றும் வெள்ள எச்சரிக்கை போன்றவற்றுக்கு இவற்றை பயன்படுத்த அர்பன் ஸ்கை திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X