" வைகுந்தமோ, சிவலோகமோ சேகர்பாபு வழிகாட்டுவார் " - சட்டசபையில் ருசிகரம்

Added : ஜன 06, 2022 | கருத்துகள் (20)
Advertisement
சென்னை: சட்டசபையில் 2 ம் நாளில் கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.சட்டசபை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் துவங்கிய உடன், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழப்பு, முன்னாள் கவர்னர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்

சென்னை: சட்டசபையில் 2 ம் நாளில் கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.



latest tamil news



சட்டசபை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் துவங்கிய உடன், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழப்பு, முன்னாள் கவர்னர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 2வது நாள் கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதி மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ விரிவாக்கம் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில்: அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

சண்முகையா : ஒட்டப்பிடாரத்தில் கலை அறிவியல் கல்லூரி துவங்கப்படுமா?
அமைச்சர் பொன்முடி அளித்த பதிலில், தூத்துக்குடியில் போதுமான கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. பல கல்லூரிகளில் காலியிடங்கள் உள்ளன. ஒட்டப்பிடாரத்தில் அரசு கல்லூரி அமைப்பது குறித்து நிதிநிலை சீரானதும் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலை சூழலை பொறுத்துது புதிய அரசு கல்லூரிகள் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

எம்எல்ஏ ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு, சேலம் கோழிக்கால்நத்தம் - வடுகபட்டி - வைகுநத்தம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கூறினார்
அதற்கு அமைச்சர் சாலையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.


latest tamil news



எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்
பேசும்போது வைகுநத்தத்திற்கு சாலை அமைக்க கிருஷ்ண பகவானிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அமைச்சர் அனுமதி பெற்றாரா என தெரியவில்லை என கிண்டலாக கேட்டார்.
இதற்கு அமைச்சர் வேலு அளித்த பதிலில், வைகுந்தமோ, சிவலோகமோ சேகர்பாபு வழிகாட்டுவார் என தெரிவித்தார். சேகர் பாபு அறநிலைய துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை தீட்டி வருகிறார்.
தளி உறுப்பினர் ராமச்சந்திரன் ஒசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.
பத்தாண்டு காலம் தமிழகத்தை ஆண்ட கட்சி முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் திமுக அரசு மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டம் முதன் முதலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜன-202207:18:18 IST Report Abuse
அப்புசாமி பரலோகம், சுவனம் லாம் போறதுக்கு யார் வழி காட்டுவாங்க?
Rate this:
Cancel
07-ஜன-202205:45:43 IST Report Abuse
இந்தியன் தீய.மு.க. ஆட்சியில் வாழ வழிஇல்லை...சாக மட்டும் தான் முடியும்... என்னே இவர்களின் ஆட்சி....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-ஜன-202216:54:20 IST Report Abuse
sankaseshan இலவச மொட்டை பாபு சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தூதுவரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X