சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் 8 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை இருக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மருத்துவ துறையில் தமிழகம் நாட்டிலேயே முன்னோடியாக உள்ளது. நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறித் விட்டது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடு உள்ளது.
நீட் தேர்வு பள்ளி கல்வி தேர்வுமுறையை அர்த்தமற்றமாக்குகிறது.நீட் தேர்வு விலக்கு மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பவில்லை. இது தொடர்பாக கவர்னரை சந்தித்து விளக்கமளித்தேன். இது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மனு அளித்தனர். இது உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி குழுவினருக்கு நேரம் அளிக்க உள்துறை அமைச்சர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் மனு உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நீட்தேர்வுக்கு எதிரான போராட்டத்தை எள் முனையளவில் பின்வாங்காமல் முன்னெடுத்து செல்வோம். இந்த விவகாரத்தில் நாளை மறுநாள்(ஜன.,8) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE