82.ரஷ்ய பயணம்

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 06, 2022 | |
Advertisement
ரஷ்ய பயணத்தை ஒத்தி வைத்திருந்த நேதாஜி பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் ரஷ்யா செல்ல முடிவெடுத்தார். ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோ சென்றடைவதை அவரது திட்டம். நிலைமை எப்படி இருந்தாலும் ரஷ்யா சென்று விடுவது என்று முடிவு செய்தார். தனது பயணத்தை மாஸ்கோ நோக்கி தொடங்கினார். மாஸ்கோவுக்கு செல்லும் வழியில் நேதாஜி பல துன்பங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கரடுமுரடான
நேதாஜி, Netaji, நேதாஜியின் நேர்கொண்ட பார்வை

ரஷ்ய பயணத்தை ஒத்தி வைத்திருந்த நேதாஜி பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் ரஷ்யா செல்ல முடிவெடுத்தார்.

ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோ சென்றடைவதை அவரது திட்டம். நிலைமை எப்படி இருந்தாலும் ரஷ்யா சென்று விடுவது என்று முடிவு செய்தார். தனது பயணத்தை மாஸ்கோ நோக்கி தொடங்கினார். மாஸ்கோவுக்கு செல்லும் வழியில் நேதாஜி பல துன்பங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கரடுமுரடான பாதையை கடக்க வேண்டியிருந்தது. லாரி, கார், ரயில் என்று பல வாகனங்களில் மாறி மாறி பயணம் செய்தார்.

சில இடங்களில் நீண்ட தூரம் நடந்தே சென்றார். தனது பெயரையும் ஆங்காங்கே பலமுறை மாற்றிக் கொண்டார். இத்தாலி தூதரகம் வழங்கிய பாஸ்போர்ட்டில் நேதாஜியின் பெயர் ஆர்லந்தோ மொசாட்டா என்று குறிப்பிடப்பட்டிருந்ததை உதாரணமாக சொல்லலாம். விடுதலை இந்தியாவை காண வேண்டிய வேள்வியில் தன்னை அவர் ஆகுதியாக்கிக் கொண்டு செயல்பட்டார்.
எழுத்துருவாக்கம்
ஆதலையூர் சூரியகுமார்,
மாநில செயலாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்,
கும்பகோணம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X