இரண்டு பாடல்கள் பாடல்கள் இரண்டு ஜாம்பவான்கள்

Added : ஜன 06, 2022 | |
Advertisement
வெளியாகி, 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் கேட்பவர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும் சினமா பாடல்கள் இரண்டு. அவற்றுடன் தொடர்புடைய சங்கீத ஜாம்பவான்கள் இருவர். ஒருவர் காருக்குறிச்சி பி.அருணாச்சலம் மற்றொருவர் மதுரை சோமு. முந்தையவர், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கண்டெடுத்த மாணிக்கம். பிந்தையவர் சித்துார் சுப்பிரமணியத்தின் சீடர்; இது மரகதமோ!இருவரும் கர்நாடக
 இரண்டு பாடல்கள் பாடல்கள் இரண்டு ஜாம்பவான்கள்

வெளியாகி, 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் கேட்பவர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும் சினமா பாடல்கள் இரண்டு. அவற்றுடன் தொடர்புடைய சங்கீத ஜாம்பவான்கள் இருவர். ஒருவர் காருக்குறிச்சி பி.அருணாச்சலம் மற்றொருவர் மதுரை சோமு. முந்தையவர், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கண்டெடுத்த மாணிக்கம். பிந்தையவர் சித்துார் சுப்பிரமணியத்தின் சீடர்; இது மரகதமோ!இருவரும் கர்நாடக சங்கீதத்தில் வல்லுனர்களால் போற்றத்தக்க, வியக்கத்தக்க சாதனைகள் புரிந்திருந்தாலும், அவர்களின் புகழ் உச்சிக்குச் சென்றது இரண்டு சினிமா பாடல்களால் தான். 1962ல் கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் இடம் பெற்ற, 'சிங்காரவேலனே தேவா' என்ற பாடலை இப்போது கேட்டலும் மெய் சிலிர்க்கும். காருக்குறிச்சிக்கு சரியாக ஜானகியா அல்லது அவருக்கு இணையாக இவரா? விவாதம் இன்றும் முற்றுப் பெறவில்லை. தகவல் என்னவென்றால், இந்த நாதஸ்வரத்தின் 'பிச்' என்பார்களே அது, ஐந்து கட்டை அல்லது ஆறு கட்டையோ. பலரிடம் விசாரித்திருக்கிறார்கள். உண்மையில், பி.லீலா மற்றும் பி.சுசீலாவும் 'இந்த உயர் சுருதியில் பாட வல்லவர் ஒருவரே, அவர்தான் எஸ் ஜானகி' என்று சொல்ல, 'வாய்ஸ் டெஸ்ட்' நடத்தி, 'ட்ராக்' முறையிலேயே 'ரெகார்டிங்க்' செய்து, எப்படி இருக்கிறது என்று பார்த்திருக்கிறார்கள். 'பிரமாதம். கற்பனை கூட செய்ய இயலாத நாதஸ்வரமும், குரலும் இணைந்தொலிக்கும் 'டூயட்' இது. எனவே, இது ஹிட் தான் என்று வெளிவருவதற்கு முன்னரே ஊர்ஜிதமாகியுள்ளது. இங்கு 'ட்யூனை' பற்றி ஒரு சர்ச்சையும் ஏற்பட்டிருக்கிறது. 'இந்த மெட்டின் சொந்தக்காரர், படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாவே அல்ல. அது உண்மையில் டி.ஏ.சம்பந்தமூர்த்தி தான்' என்றும் சிலர் கூறுவதுண்டு. எது எப்படியோ 'ஹிட் ஹிட்' தான்!மதுரை சோமுவை பற்றிப் பேசப் போனால், அவருக்கு பட்டி தொட்டியில் பாடப்படும் வண்ணம் மருதமலை முருகன் அருளிச் செய்திருக்கிறான். 1972ல் வெளியான 'தெய்வம்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'மருதலை மாமணியே முருகையா' என்ற பாடலுடன் பேசப் பட வேண்டியவர்கள், அதை பாடிய சோமுவுடன் சேர்த்து மொத்தம் மூவர்.ஒருவர், தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா; மற்றொருவர் இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன். இந்த சோமுவின் குரலிருக்கிறதே, மேல் சிகரத்தையும் தொடும், அதளபாதாளத்திற்கும் செல்லும். குன்னக்குடி இந்தக் குரலை எந்த அளவிற்கு 'ஸ்டடி' பண்ணியிருப்பார் என்பதை, இதில் வரும் சங்கதிகளைக் கேட்டாலே தெரிந்து கொள்ளலாம். சோமு கர்நாடக இசை கச்சேரிகளில், மேடையிலேயே அங்குமிங்கும் நகர்வார். ரசிகர்களிடம் நேரிடையாகவே பேசிக் களிப்பார். ஒருவித கோலாகலமே அவரது கச்சேரிகள். ''என்னைப் போய் ஸ்டூடியேவில் அடைத்து வைத்து பாடச் சொன்னால் எப்படி'' என்றாராம். அந்தக் காலத்தில், நடிகர் நாகேஷ் படிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட 'எதிர்நீச்சல்' படத்தில், 'அவளுக்கென்ன அழகிய முகம்' எனும் பாட்டில், எம்.எஸ்.வி., பாடலின் ரெக்கார்டிங் எப்படி நடக்கும் என்பதை நமக்குக் காண்பித்தார். 'தெய்வம்' படத்தில் ஒவ்வொரு பாட்டிலும், பாடலைப் பாடுபவர் நமக்கு தெரிவார். சோமு மேடையில் ஒரு பம்பரம் போல் சுற்றிச் சுற்றி, பக்க வாத்தியக்காரர்களை உற்சாகப் படுத்துவதை நாம் காணலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X