புதுடில்லி: டில்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இருப்பதால் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நாளுக்குநாள் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று ஒரேநாளில் 10,665 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிப்பதால் அங்கு வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டில்லியில் இன்று மட்டும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான கோவிட் பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. எனினும், ஒமைக்ரான் தொற்றால் உயிரிழப்பு ஏதுமில்லை. டில்லியில் ஒமைக்ரான் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இருப்பதால் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை. மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE