கூட்டுறவு சங்கங்கள் நாளை கலைப்பு?

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான மசோதா நாளை(ஜன.,7) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது. கவர்னர் உரையுடன் நேற்று துவங்கிய இந்த கூட்டத்தொடர் நாளை நிறைவு பெற உள்ளது. இதனால், நாளை (ஜன.,7) பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி
கூட்டுறவு சங்கம், கலைப்பு, தமிழக அரசு,

சென்னை: கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான மசோதா நாளை(ஜன.,7) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது. கவர்னர் உரையுடன் நேற்று துவங்கிய இந்த கூட்டத்தொடர் நாளை நிறைவு பெற உள்ளது. இதனால், நாளை (ஜன.,7) பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் தொடர் முறைகேடு புகார் காரணமாக, அந்த சங்கங்களை கலைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அது குறித்த மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


latest tamil news




தற்போதைய நிலையில் 4,451 துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. பால் கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
06-ஜன-202222:02:58 IST Report Abuse
Mohan இன்னும் முடியல. பெனின் ராஜாவின் கருத்து சரிதான் போல.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
06-ஜன-202221:58:12 IST Report Abuse
Mohan கூட்டுறவு சங்கங்கள் கலைப்பா இல்லை சங்கத்தின் அங்கத்தினர் கலைப்பா? என்ன எழவுடா இவிங்க கூட. மூளைய 24 மணிநேரமும் சொரிஞ்சிக்கிட்டே வாழ வேண்டியிருக்கே. முடியலடா யப்பா.
Rate this:
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
06-ஜன-202221:18:36 IST Report Abuse
chinnamanibalan தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் என்பது ஒரு காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தன. ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலமாக அது கூட்டுக் கொள்ளை நிறுவனங்கள் ஆக மாறிப் போனது வேதனை. அரசுத் துறைகள் அனைத்திலும் ஊழல் பெருகியுள்ளது போன்று, தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும், ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X