கூட்டுறவு சங்கங்கள் நாளை கலைப்பு?| Dinamalar

கூட்டுறவு சங்கங்கள் நாளை கலைப்பு?

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (12) | |
சென்னை: கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான மசோதா நாளை(ஜன.,7) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது. கவர்னர் உரையுடன் நேற்று துவங்கிய இந்த கூட்டத்தொடர் நாளை நிறைவு பெற உள்ளது. இதனால், நாளை (ஜன.,7) பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி
கூட்டுறவு சங்கம், கலைப்பு, தமிழக அரசு,

சென்னை: கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான மசோதா நாளை(ஜன.,7) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது. கவர்னர் உரையுடன் நேற்று துவங்கிய இந்த கூட்டத்தொடர் நாளை நிறைவு பெற உள்ளது. இதனால், நாளை (ஜன.,7) பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் தொடர் முறைகேடு புகார் காரணமாக, அந்த சங்கங்களை கலைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அது குறித்த மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


latest tamil news




தற்போதைய நிலையில் 4,451 துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. பால் கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X