புதுடில்லி: ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று விசாரிக்கப்படும் நிலையில், போலீஸ் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது வேறு ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை கேட்ட தலைமை நீதிபதி, ‛ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று விசாரிக்கப்படும் நிலையில், போலீஸ் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்தீர்கள்?' எனக் கேள்வி எழுப்பினார். ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இவ்வழக்கை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பாபுராய், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE