தமிழகத்திற்கு 10வது தவணையாக ரூ.183 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: 17 மாநிலங்களுக்கு 10வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை
Centre, Releases, Revenue Deficit Grant, 17 States, தமிழகம், 10வது தவணை, நிதி, மத்திய அரசு, விடுவிப்பு

புதுடில்லி: 17 மாநிலங்களுக்கு 10வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும். அதன்படி, 15-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், 10வது தவணையாக தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்குவங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது.இதில் தமிழகத்துக்கு ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. இந்த 17 மாநிலங்களுக்கும் மொத்தமாக இதுவரை ரூ.98,710 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் இதுவரை ரூ.1836.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-202204:02:31 IST Report Abuse
J.V. Iyer கொடுத்த பணத்தை ஸ்டிக்கர் ஓட்டுவதற்கும், போட்டோ சூட் செய்வதற்கும் செலவழிக்காமல் இருக்கவேண்டும். செலவழித்தாலும், தமிழக மக்கள் இதை மறந்து இவர்களுக்குத்தான் வோட்டு போடுவார்கள். பிறகு கவலை என்ன?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
06-ஜன-202223:53:48 IST Report Abuse
Mohan நீங்க விடுவிச்சா போதுமா?
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
06-ஜன-202221:39:40 IST Report Abuse
ராம.ராசு மாநிலங்களின் கூட்டுத்தான் இந்திய அரசாங்கம். சரக்கு மற்றும் சேவை வரியை அனைத்து சேவையிலும் மாநில மற்றும் மத்திய என்று தனித்தனியாக வரியாகப் பெறப்படுகிறது. என்கிறபோது ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பது மிக எளிதாகத் தெரிந்துவிடும். அதை ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாநிலத்திற்க்குக் கொடுத்துவிட்டால் இப்படி தவணை தவனையாக விடுவிக்க வேண்டிய தேவையிருக்காது. அந்தந்த மாநிலமும் அவர்களுக்கான திட்டங்களை எளிதாக தொய்வின்றி செய்வதற்க்கு உதவியாக இருக்கும். அந்த மாநிலத்திற்கான பங்கை அப்போதே கொடுத்துவிட்டால் மத்திய அரசிடம் கேட்கும் நிலை இருக்காது. கடந்த மார்ச் 2021 வரை தமிழ் நாட்டிலிருந்து பெற்ற மொத்த ஆண்டு வரி வசூல் 7579 கோடி ரூபாய்கள் என்பது ஊடகச் செய்தி. அதில் பாதி அளவு 3790 கோடிகள். அதாவது ஒவ்வொரு மாதமும் 316 கோடிகள் தமிழ் நாடு மாநிலத்திற்க்குக் கிடைத்து இருக்க வேண்டும். இந்த அளவுக்கு மத்தியில் மட்டுமே வைத்துக்கொண்டு இல்லாமல் ஒவ்வொரு மாதமும் அந்த மாநிலத்திற்கான தொகையை கொடுத்துவிட்டால், மாநிலத்திற்க்கு தேவையான, ஏற்ற திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும். ஒன்பது மாதங்கள் சென்ற பிறகும் இதுவரையில் தமிழ் நாட்டிற்கு விடுவித்த தொகை ரூ.1836.67 கோடிகள் மட்டுமே. அதாவது ஒன்பது மாதங்கள் மொத்த மாநிலத்தின் பங்கில் பாதிக்கும் கொஞ்சம் கூடுதலாக. அவ்வளவுதான்.
Rate this:
06-ஜன-202222:59:27 IST Report Abuse
ஆரூர் ரங்அப்போ இதெல்லாம் தெரியாமல்தான் ஜிஎஸ்டி கவுன்சில் செயல்படுதா? INPUT கிரெடிட் எவ்வளவு என்று🙄 சரிபார்க்காமல் மாநிலங்களுக்கு திருப்பிக் கொடுத்தால் கொடுத்ததை திருப்பி கேட்க முடியுமா? இதைவிட காமெடி. பல திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழ்நாடு அரசு செலவழிக்காமல் அப்படியே மத்திய அரசுக்கு திருப்பியுள்ளார்கள்.அதாவது கொடுத்த தையே சரியாக செலவழிக்க தெரியாது. கடைசியாக 🤔முதல் பாய்ண்ட். எந்த மாநிலத்தையும் பிரிக்க அல்லது மற்றொன்றுடன் இணைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. (ஆந்திராவைப் பிரித்தது அவர்களது சட்டமன்றத்தை கேட்காமல்) அதாவது மாநிலங்கள் என்பவர் இதற்காக மத்திய அரசு மட்டுமே நிரந்தரம்🤔. எனவே மத்திய அரசு மாநிலங்களின் கூட்டாட்சி அல்ல. நிர்வாக வசதிக்காக( தாற்காலிகமாக) பிரிக்கப்பட்டவை தான் மாநிலங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X