ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் ஆபத்து: தற்கொலை படையை அமைக்கிறது தலிபான்!

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (18)
Advertisement
காபூல்: ஆப்கனில் தலிபான் ஆட்சிக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் அச்சுறுத்தலாக இருப்பதன் காரணமாக, தலிபான் அரசு ராணுவத்தில் தற்கொலை படையை இணைக்க திட்டமிட்டுள்ளது.ஆப்கனில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான் ஆட்சி அமைந்த பிறகு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதுவரை நடந்த 5 பெரிய
Afghan, Taliban, Suicide Bombers, Army Ranks, ஆப்கானிஸ்தான், தலிபான், தற்கொலை படை,

காபூல்: ஆப்கனில் தலிபான் ஆட்சிக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் அச்சுறுத்தலாக இருப்பதன் காரணமாக, தலிபான் அரசு ராணுவத்தில் தற்கொலை படையை இணைக்க திட்டமிட்டுள்ளது.

ஆப்கனில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான் ஆட்சி அமைந்த பிறகு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதுவரை நடந்த 5 பெரிய தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அவை பெரும்பாலும் பயங்கரவாத அமைப்பில் உள்ள தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டவை. அவர்களை எதிர்கொள்ள தலிபானும் தங்கள் ராணுவத்தில் தற்கொலைப் படையை இணைக்க உள்ளது.


latest tamil news


இது பற்றி தலிபானின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரீமி கூறியதாவது: அமெரிக்கா மற்றும் ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான கடந்த 20 ஆண்டுகால தலிபான்களின் போரில் தற்கொலை படையினர் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டனர். தற்போது நாடு முழுவதும் சிதறியிருக்கும் அக்குழுவினரை சீரமைத்து ஒரே பிரிவின் கீழ் கொண்டு வந்து ஆப்கானிஸ்தானை பாதுகாக்க விரும்புகிறோம். உயிரை தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களை சிறப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவோம். எல்லைகளில் தற்கொலை படையினர் ஒரு பகுதியாக இருப்பர். நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வலுவான மற்றும் அமைப்பான ராணுவத்தை உருவாக்க உள்ளோம், என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
07-ஜன-202211:13:46 IST Report Abuse
மிளிர்வன் பயங்கரவாதி பொதுமக்களை கொன்று, பொருளாதார கட்டமைப்பை தகர்த்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறான். தற்கொலை தாக்குதல் செய்கிறான்.. நாட்டை தன் கையில் எடுக்க முனைகிறான்.. ஆனால் நாட்டை ஆளும் அரசு, யாரை / எதை எதிர்த்து தற்கொலை தாக்குதல் நடத்தும், தமது நாட்டிற்குள்ளேயே ..? பயங்கரவாதியை எதிர்த்து என்றால், சட்டப்படியே சுட்டுவிட்டு போய் கொண்டே இருக்கலாமே? தாலிபான்களின் திட்டம் புரியாத புதிர்..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-202205:21:27 IST Report Abuse
Kasimani Baskaran தீவிரவாதிகளுக்கு 'தற்கொலைப்படைதான்' பரீட்சயமான விசயம். தெரிந்ததைத்தானே செய்ய முடியும்?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-202204:05:57 IST Report Abuse
J.V. Iyer ஒரு பயங்கரவாத அரசுக்கு ஒரு பயங்கரவாத இயக்கம் அச்சுறுத்தல். எங்கேயோ உறுத்துகிறதே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X