அடுத்த முதல்வர் நீங்க தான் : சந்திரபாபு நாயுடுவை பார்த்து மக்கள் கோஷம்

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 06, 2022 | கருத்துகள் (16)
Advertisement
வேலுார்:அடுத்த முதல்வர் நீங்க தான் என சந்திரபாபு நாயுடுவை பார்த்து மக்கள் கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பெங்களூரில் இருந்து, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, திம்மாம்பேட்டை வழியாக ஆந்திரா மாநிலம், குப்பத்திற்கு இன்று (ஜன.06) மதியம் காரில்

வேலுார்:அடுத்த முதல்வர் நீங்க தான் என சந்திரபாபு நாயுடுவை பார்த்து மக்கள் கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



latest tamil news



ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பெங்களூரில் இருந்து, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, திம்மாம்பேட்டை வழியாக ஆந்திரா மாநிலம், குப்பத்திற்கு இன்று (ஜன.06) மதியம் காரில் சென்றார்.திம்மாம்பேட்டை நகர தெலுங்கு தேச கட்சியினர், செட்டியப்பனுார் கூட்டு சாலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது, ஆந்திரா மாநிலத்தில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழில் படித்து வருகின்றனர்.அவர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும், தமிழ் தெரிந்த போதுமான அலுவலர்களை நியமிக்க தாங்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அவரிடம் மனு கொடுத்தனர்.


latest tamil news


மனுவை பெற்றுக் கொண்டு ஏற்பாடுகள் செய்வதாக நாயுடு கூறினார். ஆந்திராவுக்கு அடுத்த முதல்வர் நீங்க தான் என அப்பகுதி மக்கள் கூறியதை கேட்ட சந்திரபாபு நாயுடு அதை ஆமோதிப்பதை போல சிரித்துக் கொண்டே சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
07-ஜன-202207:59:16 IST Report Abuse
DARMHAR நாற்பது வருஷதிற்கு மேல் அரசியல் அனுபவம் எனக்கு என்று சொல்லிகொள்ளுபவருக்கு தேர்தலில் தோற்றால் என்ன செய்வார் ? பழங்கதை ஒன்று உண்டு. ஒரு நரி திராட்சை பந்தலில் இருந்து தொங்கும் திராட்சை குலைக்காக எம்பி எம்பி எம்பி குதித்தும் குலையை அடைய முடியவில்லையாம்.. ஏமாந்து போன நரி சீச்சீ இந்த பழம் புளிக்கும் போல இருக்கிறது என்று வாலை சுருட்டிக் கொண்டு வேகமாகவே அங்கிருந்து கிளம்பிவிட்டதாம்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-ஜன-202206:29:00 IST Report Abuse
Indhuindian இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணகளமாக்கிட்டாங்களே பாவம்டா கைப்புள்ள
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-202205:17:44 IST Report Abuse
Kasimani Baskaran தமிழக முதல்வரிடம் கொடுக்கவேண்டிய மனுவை அவரது சொந்தங்களிடம் கொடுப்பது எப்படி சரியாகும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X