சண்டிகர்: பஞ்சாபில் பிரதமரின் பயண வழியில் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதித்ததால், அவர் திரும்பிச் செல்லும்படி நேர்ந்தது. 'பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்ததால் பஞ்சாப் மாநில அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என பா.ஜ.,தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
![]()
|
பஞ்சாப் மாநிலத்திற்கு இரு மாதங்களுக்குள்ளாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்து, புதிய வேளாண் சட்டங்களுக்கு அங்கு தீவிர எதிர்ப்பு உண்டானது. அச்சட்டங்களை ரத்து செய்த பின்னரும் பஞ்சாபில் ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்கின்றன. அதனை மாநில அரசும் அனுமதிக்கிறது.
இந்நிலையில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க வந்த பிரதமரின் காரே செல்ல முடியாதபடி சாலை மறித்து நேற்று (ஜன., 05) போராட்டக்காரர்கள் குவிந்திருந்தனர். இதனால் பிரதமர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.
பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு நாளை விசாரணைக்கு வருகிறது. பிரதமருக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்திருந்தார். சில மணி நேரங்களில் பிரதமரே ஜனாதிபதியை நேரில் சந்தித்து பஞ்சாபில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கினார். இது பஞ்சாப் அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()
|
பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யும் அளவு துணிந்த பஞ்சாப் அரசை கலைக்க வேண்டும் என பா.ஜ.,வினர் சமூக ஊடகங்களில் தீவிரமாக முழங்கி வருகின்றனர். பா.ஜ.க., தொண்டர்கள் மட்டுமின்றி கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் அனைவரும் பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சித் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை என தெரியவந்ததால் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதி ஆட்சி அமலாவதற்கும் வாய்ப்பு உண்டு.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement