'எந்த வித்தியாசமும் இல்லை!'
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் வேலுாரில், 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.பின் நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க, அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும். மணல் குவாரிகள் திறக்கப்படும்; அரசு அனுமதியின்றி கடந்த ஆட்சியில் நடந்து வந்த கல்குவாரிகளை தடுத்து நிறுத்தியுள்ளோம். இப்போது, அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் மட்டும் தான் இயங்குகின்றன...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'ஆளுங்கட்சியினரை, 'கவனிக்கும்' கல் மற்றும் மணல் குவாரி உரிமையாளர்களுக்கு தான் இப்போது அனுமதி கிடைக்கும்... வசூல் வேட்டையில, இரு திராவிட கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE