ஆனைமலை:கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில், மூலிகை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.கோட்டூர் அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில், பொள்ளாச்சி நல்வழிகாட்டி அறக்கட்டளை சார்பில், மூலிகை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.தலைமை ஆசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார், அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்பாலாஜி, தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன், உதவி தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு, நாவல், மா, கொய்யா, மலைவேம்பு, பூவரசன் உள்பட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.அறக்கட்டளை நிர்வாகிகள் பேசியதாவது:காய்ச்சல், தலைவலி, இருமல் உள்பட பல பிரச்னைகளை, மூலிகைகள் பயன்படுத்தி எளிதாக வீட்டு வைத்தியம் வாயிலாக, குணப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் வீட்டில், நொச்சி, வேம்பு, கற்பூரவல்லி, துளசி, வெற்றிலை உள்ளிட்டவற்றை வளர்க்க வேண்டும்.அலோபதி மருத்துவத்தை பின்பற்றுவதால், நாளுக்குநாள் மக்களிடையே மூலிகை பயன்பாடு குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற, மாணவர்கள் அனைவரும் நம்மைச்சுற்றியுள்ள மூலிகைகளின் மகத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். அதேபோல், ஆரோக்கியமாக வாழவும், காற்று மாசுபாட்டை தடுக்கவும், மாணவர்கள் சைக்கிள் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE